நடைபெற்று முடிந்துள்ள நகர்மன்றத் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆபிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, இன்று நகரின் அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாகச் சென்றார்.
இன்று மாலை 04.30 மணி முதல் மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை காயல்பட்டினம் புறநகர் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்தார்.
கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் பள்ளி அங்கத்தினர் கூடிய இந்நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவருக்கு பள்ளி தலைவர் சால்வை அளித்து வரவேற்றார்.
பள்ளி கட்டிடத்தின் வருங்கால விரிவாக்கத் திட்டம் குறித்து அப்போது அவரிடம் விளக்கப்பட்டது.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்.
படங்கள்:
முத்து இஸ்மாயில். |