நடைபெற்று முடிந்துள்ள நகர்மன்றத் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆபிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, நகரின் அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாகச் சென்றார்.
காலை 09.00 மணியிலிருந்து மதியம் 02.30 மணி வரை காயல்பட்டினம் அகநகர் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்தார்.
மாலை 04.30 மணிக்கு தைக்கா தெரு தேர்தல் காரிகாலயம் அருகிலிருந்து புறப்பட்டு, முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு வழியாகச் சென்று கோமான் மேலத் தெரு, நடுத்தெரு, கீழத்தெரு வழியாக அருணாச்சலபுரம், கடையக்குடி, கற்புடையார் பள்ளி வட்டம், சுலைமான் நகர், மங்களவாடி, ஓடக்கரை, காயிதேமில்லத் நகர், பூந்தோட்டம், ஆசாரிமார் தெரு, பேருந்து நிலையம், எல்.எஃப்.வீதி, ஜெய்லானி நகர், கீழ லெட்சுமிபுரம், மேல லெட்சுமிபுரம், எல்.ஆர்.நகர், அழகாபுரி, பாஸ் நகர், நியூ காலனி, இரத்தினபுரி, டிரைவர் காலனி, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, குளம் சாகிப்தம்பி தோட்டம், சிவன்கோயில் தெரு, முத்து ஹாஜி நகர், பாக்கர் காலனி வழியாக தைக்கா தெரு வந்து, இரவு 10.00 மணியளவில் காரிகாலயத்தில் நகர்வலம் நிறைவுற்றது.
இந்நகர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆறுமுகநேரி காவல்துறையினர் செய்திருந்தனர். புறநகர் நகர்வல காட்சிகள் பின்வருமாறு:-
களத்தொகுப்பு & படங்கள்:
முத்து இஸ்மாயில். |