கத்தர் காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டம், ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடைபெற்று முடிந்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கத்தர் காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 06ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளன்று மாலை 05.00 மணியளவில் கத்தரில் உள்ள வக்ரா பூங்காவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மன்றத்தின் தலைவர் ஜனாப் ஃபாஸுல் கரீம்
தலைமை தாங்கினார். துபையிலிருந்து வந்திருந்த ஜனாப் ஷக்காஃப், ஜனாப் உமர், ஜனாப் மூஸா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இக்கூட்டத்தில் அங்கம் வகித்தனர். ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மன்றச் செயலாளர் ஜனாப் ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் மருத்துவ உதவிக்குழு தலைவர் ஜனாப் வி.எம்.டி.அப்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார். மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் விளக்கிப் பேசினார்.
பின்னர் மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்பட்டது.
தொழுகை இடைவேளை நிறைவுற்றதும் துவங்கிய இரண்டாம் அமர்வில், மழலையருக்கான - படங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், மன்ற உறுப்பினர்கள் 6 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களிடையே வினாடி-வினா போட்டி 8 சுற்றுகளாக நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற முதல் மூன்று அணியின் போட்டியாளர்களுக்கு தனித்தனி பரிசுகளும், வெற்றிக்கு முனைந்த அணிகளின் தலைவர்களுக்கு பொதுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவுப்பரிசுள் வழங்கப்பட்டன.
இக்கூட்டம் பெருநாள் ஒன்றுகூடலாக நடத்தப்பட்டதால், உறுப்பினர்கள் தமக்குள் மகிழ்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டு, நகர் நடப்புகள் குறித்து மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர்.
இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இரவு 10.00 மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவுற்றதையடுத்து, உறுப்பினர்கள் தத்தம் இல்லங்களுக்குத் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.A.செய்யித் முஹ்யித்தீன்,
(செயலாளர்.)
படங்கள்:
B.ஃபைஸல் ரஹ்மான், |