காயல்பட்டினம் மகுதூம் பள்ளியில் 11.11.2011 வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொழுகை நடைமுறைப்படுத்தப்பட்டது. துவக்க ஜும்ஆவையொட்டி, அன்று காலை 11.11 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை 11.00 மணிக்குத் துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு, நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஏ.ஷேக் முஹம்மத் (கிஸார்) கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கொழும்பு தாருல் ஹதீஸ் இயக்குனர் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ துவக்கவுரையாற்றினார்.
பின்னர், சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ பாழில் சிறப்புரையாற்றினார்.
ஹாஜி மக்கீ நூகுத்தம்பி நன்றி கூறினார். பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இச்சிறப்பு நிகழ்ச்சியில் அங்கம் வகித்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. துவக்கமாக, நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் அவர்களுக்கு ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் அவர்களும், மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ அவர்களுக்கு ஹாஜி கத்தீப் ஸலீம் அவர்களும், மவ்லவீ ஹாஃபிழ் முஹம்தம் அலீ ஃபாழில் பாக்கவீ அவர்களுக்கு ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ அவர்களும், மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ அவர்களுக்கு ஹாஜி நூஹ் ஸாஹிப் அவர்களும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
பின்னர் அதே அமர்வில், ஜும்ஆ தொழுகைக்கான முதல் அதானை அன்வர் ஹாஜி ஒலித்தார். அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது அதான் மற்றும் மஅஷர் ஆகியவற்றை ஆறாம்பள்ளியின் இமாம் ஹாஜி செய்யித் இப்றாஹீம் வழங்கினார்.
நிறைவாக, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஜும்ஆ குத்பா பேருரை நிகழ்த்தி, தொழுகையை வழிநடத்தி, துஆவுடன் துவக்க ஜும்ஆ நிகழ்வுகள் அனைத்தையும் நிறைவு செய்து வைத்தார்.
சிறப்பு நிகழ்ச்சி மற்றும் ஜும்ஆ தொழுகையில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த சுமார் 1,400 பேர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் விமரிசையாக செய்திருந்தனர்.
மின்தடையால் ஏற்படும் வசதிக்குறைவைக் களைந்திடும் பொருட்டு பள்ளியில் பெரிய ஜெனரேட்டர் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
மக்கீ நூஹுத்தம்பி,
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |