நடைபெற்று முடிந்துள்ள நகர்மன்றத் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆபிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, இன்று நகரின் அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாகச் சென்றார்.
இன்று காலை 09.00 மணியிலிருந்து மதியம் 02.30 மணி வரை காயல்பட்டினம் அகநகர் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்தார்.
காயல்பட்டினம் கொச்சியார் தெருவிற்குச் சென்ற அவரை, 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் வரவேற்றார்.
அப்பாபள்ளித் தெருவிற்குச் சென்றபோது, 09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா அவரை வரவேற்றார்.
காட்டுத் தைக்கா தெருவிற்குச் சென்றபோது, 17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் அவரை வரவேற்றார்.
மாலையில், கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிக்குச் சென்ற அவரை, 07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி வரவேற்றார்.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய். |