காயல்பட்டினம் நகராட்சியின் அவசரக் கூட்டம் 15.11.2011 செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணிக்கு, நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற ஆணையாளர் (பொறுப்பு) கண்ணையா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் எண் : 1
* எந்த ஒரு பிளாஸ்டிக் தூக்குப்பையும் அளவில் 8 இஞ்ச் X 12 இஞ்ச் அளவுக்கு குறைவில்லாததாகவும், தடிமனில் 20 மைக்ரான் அளவிற்குகுறைவில்லாததாகவும் இருத்தல் வேண்டும்.
(குறிப்பு : இதற்கு விளக்கமாக,மேற்கண்ட 8 இஞ்ச் அகலம் மற்றும் 12 இஞ்ச் உயரம் கொண்ட 50தூக்குப்பைகளின் எடையானது 105 கிராமாகவோ அல்லது அதில் 5 % கூடுதலாகவோ அல்லது 5 % குறைவாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
* எந்தவொரு விற்பனையாளரும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்அல்லது பிளாஸ்டிக் கவர்களில் அல்லது பிளாஸ்டிக் கொள்கலனில் (Container)உணவுப்பொருட்களை சேமிக்கவோ, கொண்டு செல்லவோ, விற்பனைசெய்யவோ அல்லது கட்டிக்கொடுக்கவோ கூடாது.
* மேலும் தேநீர் மற்றும் பிற சூடான மற்றும் சாதாரண அல்லது குளிரானபானங்களை 'ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படும்பிளாஸ்டிக் கொப்பைகள் அல்லது பிளாஸ்டிக் கப்புகள் அல்லது பிளாஸ்டிக்கொள்கலனை மொத்தமாக விற்பனை செய்வதோ அல்லது உபயோகிப்பதோகூடாது.
* உணவுப்பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை கட்டுவதற்கோ அல்லதுபரிமாறவதற்கோ புதிய அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்ஸ்தட்டுக்களையோ அல்லது பிளாஸ்டிக் விரிப்பகளையோ மொத்தமாகவிற்பனை செய்யவோ அல்லது சில்லறையாக விற்பனை செய்வதோ அல்லதுஉபயோகிப்பதோ கூடாது.
* ஒவ்வொரு தனிநபர் அல்லது வீடு அல்லது நிறுவனம், தாங்கள் உருவாக்கும்திடக்கழிவுகளிலுள்ள பிளாஸ்டிக்ஸ் கழிவுகளை தனியாகப் பிரித்துகாயல்பட்டணம் நகராட்சி ஆணையர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நேரத்தில்சுகாதாரப் பணியாளரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
* 1920 ஆம் வருடத்திய தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 306உட்பிரிவு 29 இன் கீழ் உள்ள அதிகாரங்கள் அடிப்படையில் காயல்பட்டணம்நகராட்சியில் மேற்கண்ட நடவடிக்கைகள் பொது மக்களின் நலன் கருதிசெயல்படுத்த தீர்மானித்தல்.
மேலம் மேற்கண்ட நிபந்தனைகளை மீறி காயல்பட்டணம் நகராட்சிஎல்லைக்குள் பிளாஸ்டிக்ஸ் தூக்குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக்ஸ்விரிப்புகள் முதலியவற்றை மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனைசெய்பவருக்கும் அவற்றை உபயோகிப்பவர்களுக்கம், பிளாஸ்டிக்ஸ் கழிவுகளைதனியாக பிரித்தெடுத்து ஒப்படைக்காத தனிநபர் அல்லது வீடு அல்லதுநிறுவனத்திற்கு கீழ்கண்டவாறு அபராதம் விதிக்கப்படுவதுடன் அந்தவியாபாரியிடம் உள்ள அனைத்து பிளாஸ்டிக்ஸ் பைகளும் பறிமுதல்செய்யப்படும். இவ்வுத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தபடும்.கீழ்கண்டவாறு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்க பட்டுள்ளது.
* மொத்த விற்பனையாளருக்கு அபராதம் - ரூபாய். 1000
* சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம் - ரூபாய். 500
* உபயோகிப்பவர்களுக்கு அபராதம் - ரூபாய். 100
* பியாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு - ரூபாய். 100
* பியாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத தனி நபர் / வீடுகள் - ரூபாய். 25
வசூலிக்கப்படும் அபராதத் தொகை காயல்பட்டணம் நகராட்சி பொதுநிதிககணக்கில் வரவு வைக்கப்படும்.
பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக்ஸ் பைகள் உடனடியாக வெட்டப்பட்டோஅல்லது கிழிக்கப்பட்டோ காயல்பட்டணம் நகராட்சி அலுவலகத்திலோ அல்லதுதிடக்கழிவு மேலாண்மை உரக்கிடஙகிலோ சேமிக்கப்பட்டு இறுதியாக சிமெணட்ஆலைகளில் ஊடு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பி வைக்கவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் எண் : 2
காயல்பட்டணம் நகராட்சியில் மக்கள் தொகை 40542 (2011-ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) ஆகும். தற்போது இந்நகருக்கு தாமிரபரணியாற்றினை குடிநீர் ஆதாரமாகக் கொண்டு காயல்பட்டணம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பாராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் நீரேற்று நிலையத்திலிருந்து தினமும் 23 இலட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 57 லிட்டர் வீதம் 4 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தினசரி வினியோகிக்கவும், அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தொடர்ந்து விநியோகம் செய்ய ஏதுவாகவும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நீர் ஆதாரத்தினை பெருக்கவும் வேண்டியுள்ளது.
எனவே காயல்பட்டணம் நகராட்சிக்கு புதிதாக குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்கள் மூலம் M/S.வேப்காஸ் லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்தாரை கலந்தாலோசகராக நியமனம் செய்து விரிவான திட்ட மதீப்பீடு ரூ.2967 இலட்சத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி புதிய காயல்பட்டணம் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ள மதீப்பீட்டுத் தொகை ரூ.2967 இலட்சத்திற்கு S.L.S.C. (State Level Sanctioning Committee) குழுவினரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் திட்டத்திற்காக விரிவான திட்ட மதிப்பீடு ரூ.2967 இலட்சத்தில் 80 சதவீத தொகையான ரூ.2373.60 இலட்சத்தை மத்திய அரசின் மானியமாக பெறவும், 10 சதவீத தொகையான ரூ.296.70 இலட்சத்தை மாநில அரசின் மானியமாக பெறவும் மேலும் மீதமுள்ள 10 சதவீத தொகையான ரூ.296.70 இலட்சத்தை இந்நகராட்சி பொது நிதியிலிருந்து செலுத்தவும் மேற்படி திட்டத்தினை நகராட்சி மூலம் செயல்படுத்தவும் மன்றம் அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது தீர்மானமான 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சி மூலமே செயல்படுத்தும் விஷயத்தில் தேவைப்படும் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றே நிறைவேற்றிடவும், அவ்வாறு பெறப்படாதபட்சத்தில், அத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யலாம் எனவும் அனைத்து உறுப்பினர்களும் - நகர்மன்ற தலைவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க - எழுத்துப்பூர்வமாக இசைவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அவசரக் கூட்டத்தின் முக்கிய பொருள்களான இவ்விரு அம்சங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், 18 வார்டுகளைச் சார்ந்த உறுப்பினர்களும் தமது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவற்றைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர் ஆபிதா, நகராட்சியின் உண்மையான நிதிநிலை அறிக்கை முறைப்படி கேட்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்கப்பெற்ற பின்னர், நிதிநிலையைக் கவனத்திற்கொண்டு, அனைத்து வார்டுகளுக்கும் சம அளவில் நிதியொதுக்கீடு செய்து நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றலாம் என்றும், பணிகளின் அவசர நிலையைக் கவனத்திற்கொண்டு முன் பின் என வரிசைப்படுத்தி செய்துகொள்ளலாம் என்றும், அதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர்கள் அதற்கு ஏகமனதாக இசைவு தெரிவித்ததையடுத்து, மதியம் 03.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த ஒரு மாணவரை அப்பள்ளி தலைமையாசிரியர் செண்பகவல்லி அழைத்து வந்து, அவர் புதிதாக போடப்பட்டுள்ள சாலையில் கீழே விழுந்துவிட்டதாகவும், எனவே, பள்ளிக்கூடத்திற்கருகில் துரிதமாக வேகத்தடை அமைத்துத் தருமாறும் கோரினார்.
அதுகுறித்து, அது தொடர்புடைய அதிகாரிகளுக்கு தாம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் ஆவன செய்யப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் அப்போது தெரிவித்தார்.
கூட்டத்தின் சில காட்சிகள் பின்வருமாறு:-
[செய்தி திருத்தப்பட்டது - November 17,2011 - 16:25] |