தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில், தேசிய நூலக 44ஆவது வார விழா, 18.11.2011 அன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, அரசு நூலக புரவலர்களான காயல் கருப்பசாமி, ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நூலகர் அ.முஜீப் அனைவரையும் வரவேற்றார்.
காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், அரசு நூலக புரவலர் ஆசிரியர் சுலைமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நாசரேத் அரசு மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுவாமிதாசன் சிறப்புரையாற்றியதோடு, ‘குழந்தை உளவியல்‘ என்ற நூலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
எழுத்தாளர் ரஹீமா, கே.ஏ.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.கே.குமரகுரு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவையொட்டி, நூலக வாசகர் வட்டம் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியருக்கான கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பின்னர், கட்டுரைப்போட்டி நடுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் ஓய்வுபெற்ற நூலகர் செண்பகம், தற்போதைய நூலகர் அ.முஜீபுக்கு பரிசு வழங்கினார்.
நூலக வாசகர் வட்ட உறுப்பினர் மவ்லவீ ஸலாஹுத்தீன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் மும்பை முகைதீன், உறுப்பினர்களான லுக்மான், சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
விழாவை, அரசு பொது நூலகத்தின் காயல்பட்டினம் கிளை நூலக வாசகர் வட்டம், காயல்பட்டினம் அரிமா சங்கம், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.
தகவல்:
ஆசிரியர் மு.அப்துல் ரசாக்,
துணைத்தலைவர்,
வாசகர் வட்டம், அரசு பொது நூலகம், காயல்பட்டினம் கிளை. |