காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பான Cancer Fact Finding Committee - CFFC அமைப்பின் ஆய்வறிக்கைகள், குவைத் காயல் நல மன்றம் சார்பில் 17.11.2011 அன்று காலை 11.00 மணிக்கு, குவைத்திலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குவைத் காயல் நலமன்ற தலைவர் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா, உறுப்பினர் வி.என்.எஸ்.அப்துல் ரஹ்மான் ஆகியோரிணைந்து, குவைத்திற்கான இந்திய தூதரின் அறிவுரையின்படி, அதன் முதன்மைச் செயலாளர் எச்.கே.மோகன் இடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட Hஎச்.கே.மோகன், அது தொடர்பான துறை அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.
தகவல்:
L.T.அஹ்மத் முஹ்யித்தீன்,
செயலாளர்,
காயல் நல மன்றம், குவைத். |