காயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு மையத்தின் (KCGC) துணைக்குழு கூட்டம் நவம்பர் 19 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. அது குறித்து
- அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு மையத்தின் (KCGC) துணைக்குழு கூட்டம் - 144 கிரிம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள KCGC அலுவலகத்தில் 19-
11-2011 சனி மாலை 4:30 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆடிட்டர் S.S. அஹமது ரிஃபாய் தலைமை தாங்க, குளம் முஹம்மது
இபுராகிம் - இறைமறை வசனங்களை ஓதினார். சென்ற கூட்டத்தின் நிகழ்வுகளை குளம் முஹம்மது தம்பி பகிர்ந்துரைத்தார்.
KCGC யின் கடந்த
காலத்தில் இருந்து தற்போது வரையுள்ள செயல்பாடுகளையும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆடிட்டர் S.S. அஹமது ரிஃபாய்
விவரித்தார்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட துணைக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பின் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்-1:
காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) ன் Bye Laws இறுதி வடிவம் பெற்று கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக
அங்கீகரிக்கப்பட்டது.
தீர்மானம்-2:
KCGC-ன் வேலைவாய்ப்பு குழுவின் சார்பில் அதன் பிரத்தியேக இணையதளமாக (KayalJobs.com) என்ற வளையதளத்தை வெகு விரைவில்
துவக்கிட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்-3:
சென்னை வாழ் காயலர்கள் உள்ளடக்கிய KCGC-ன் பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெகு விரைவில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம்-4:
தகவல் தொடர்பு வசதிக்காக கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிகள் KCGC-ன் ஒவ்வொரு குழுவிற்கும்
தனிதனியே ஏற்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
-- ஒருங்கிணைப்பு குழு - coordination@kcgc.in
-- மருத்துவ குழு - medical@kcgc.in
-- கல்வி குழு - education@kcgc.in
-- வேலைவாய்ப்பு குழு - jobs@kcgc.in
தீர்மானம்-5:
KCGC - ன் கடந்த காலத்தில் இருந்து இது வரையிலான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து S.H. சமீமுல் இஸ்லாம் நன்றி கூற, துஆ - கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மது முக்தார்,
ஒருங்கிணைப்புக்குழு,
காயல்பட்டணம் - சென்னை வழிக்காட்டு மையம் (KCGC). |