காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாகும். பழமையான இப்பள்ளியின் கட்டிடம் கடந்த 1986ஆம் ஆண்டுவாக்கில், பள்ளயின் அப்போதைய தலைவர் மர்ஹூம் ஹாஜி எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், துணைத்தலைவர் ஹாஜி காதிர் ஸாஹிப் ஆலிம், செயலர் மர்ஹூம் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரின் நிர்வாக வழிகாட்டலில் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. அந்நேரத்தில், பள்ளி வளாகத்தோடு ஒட்டியிருந்த கழிப்பறை புனர்நிர்மானத்திற்கு அவசியமில்லாத நிலையில் இருந்தது.
வருடங்கள் செல்லச்செல்ல, கழிப்பறை பகுதியின் சுவர்கள் உடைப்பெடுக்கத் துவங்கியது. மக்கள் புழக்கமும் அதிகரித்து வருவதால் இக்கழிப்பறை புனர்நிர்மானம் செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது.
இந்நிலையில், அக்கழிப்பறையை இடித்துக் கட்டவும், பள்ளி வளாகத்தின் வடமேல் முனையில் தீவுத்தெரு பகுதியில் 4 வாகன நிறுத்தகங்களைக் கட்டித் தரவும், தொழிலதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா முன்வந்ததையடுத்து, சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பள்ளிவாசல் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, மேற்படி கழிப்பறையை இடித்து விரிவாக்கிக் கட்டவும், புதிதாக வாகன நிறுத்தகங்கள் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து, கட்டிடப்பணிகள் நடைபெற்று வரும் காட்சிகள் பின்வருமாறு:-
|