Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:37:59 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7593
#KOTW7593
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 20, 2011
இனி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை! குருவித்துறைப்பள்ளி பொதுக்குழு முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4362 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இனி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என குருவித்துறைப்பள்ளி பொதுக்குழு முடிவு செய்துள்ளது. விபரம் பின்வருமாறு:-

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மீள்பார்வை செய்வதற்காக காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் பொதுக்குழுக் கூட்டம் 12.11.2011 சனிக்கிழமை இரவு 08.15 மணிக்கு, வெளிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



பள்ளி துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த காயல்பட்டினம் உள்ளாட்சித் தேர்தல் நிகழ்வுகள், அதில் குருவித்துறைப்பள்ளி ஜமாஅத் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.

இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1:
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், நமது குருவித்துறைப்பள்ளி மஹல்லா சார்பில் 07ஆவது வார்டுக்கு பொது வேட்பாளராக நியமிக்கப்பட்ட மர்ஹூம் முஹம்மத் ஜிஃப்ரீ அவர்களின் மகன் ஜனாப் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் அவர்களுக்கு எதிராக போட்டியிட்டு, அவர்களது வெற்றியை பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட மர்ஹூம் செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மகன் ஜனாப் எஸ்.ஐ.செய்யித் முஹம்மத் ரஃபீக் அவர்களை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 2:
மாட்டுக்குளம் சம்பந்தமாக வந்த புகார் லெட்டரின் அடிப்படையிலும், நகர்மன்றத் துணைத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் விஷயத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும் 08ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் அவர்களிடம் ஜமாஅத் நிர்வாகம் சார்பில் 13.11.2011 அன்று விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3:
இனி வரும் தேர்தல்களில் பள்ளி நிர்வாகம் எந்த விதத்திலும் தலையிடாது என்று தீர்மானிக்கப்பட்டது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக, மவ்லவீ ஹாஃபிழ் ஹாஜா பந்தேநவாஸ் மிஸ்பாஹீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by MOHD IKRAM (saudi arabia) [20 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13614

இனி வரும் காலங்களில் நமது ஊரை சேர்ந்த எந்த பொது அமைப்புகளும் நமது நகரமன்ற தேர்தல் விசயங்களில் தலை இடாமல், தமிழக கட்சிகளின் சார்பாக வேட்பாளர்களை போட்டி இட சொல்லுவதுதான் நமது ஜமாத்துக்கு மரியாதை கிடைக்கும்.

இந்த தேர்தலில் எல்லா வார்டுகளிலும் எத்தனை போட்டி வேட்பாளர்கள். யாரவது ஜமாத்துக்கு கட்டுப்பட்டு நடந்தார்களா? நமக்கு அவமானம் கிடைத்ததுதான் மிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [20 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13618

வரவேற்க தக்க தீர்மானம். அல்ஹம்து லில்லாஹ் . அதே சமயம் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாப் முத்து ஹாஜி அவர்கள் போட்டி இட்டார்கள் அப்போது இதே ஜனாப் ரபீக் அவர்கள் எதிர்த்து போட்டியிட்டார்கள், முத்து ஹாஜி அவர்கள் தோல்வி அடைந்தார்கள் . அப்போதே இது போன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் ஜனாப் ரபீக் இப்போது ஒதுங்கி இருந்து இருப்பார் .அப்போது ஊக்கபடுத்தி ஜனாப் ரபீக் அவர்கள் வெற்றி பெற ஜனாப் முஹம்மது அலி சாஹிப் ( T .M ) அவர்கள் ,தற்போது 7 வது வார்டில் முஹல்லா சார்பில் போட்டியிட்டு ஜனாப் ரபீக் அவர்களினால் வாக்குகள் பிரிந்து தோல்வி அடைந்த ஜனாப் M .J .செய்து இப்ராஹீம் போன்ற நம் ஜமாஅத் அங்கத்தினர்கள் காரணமாக இருந்ததினால் இன்று ஜனாப் M .J . போன்ற தலை சிறந்த நபர்கள் வெற்றிபெற முடியாமை ஆகி விட்டது. சிந்தித்து செயல் படுவோம் எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பள்ளியின் கட்டிட புனர் நிர்மாணங்கள் தொய்வின்றி நிறைவு பெற அருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by Noohu Amanullah (Makkah) [21 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13625

ஆஹா அருமையான தீர்மானம்..இந்த தீர்மானத்தை ஜமாத்தார்கள் அனைவரும் மனதார ஒப்புக்கொள்கிறோம். நிர்வாகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [21 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13626

குருவித்துறை பள்ளியின் இந்தசுய பரிசோதனை (introspect ) வரவேற்கத் தகுந்தது.

தேர்தலில் தலையிடக்கூடாது என்ற முடிவு ஒரு சரியான முன்னுதாரணமாக இருக்க முடியாது.

1 ) தேர்தலுக்கும் முன் 7 வடு வார்டில் குருவித்துறை பள்ளி ஜமாத்தாரின் அணுகுமுறையை வேறு மாதிரி அமைத்திருக்கலாம் என்பதே எனது கருத்து. 8வது, 9வது வார்டுகளில் செய்ததைப்போல, 7வது வார்டிலும் குருவித்துறை பள்ளி ஜாமத்தை சாராத 7 ஆம் வார்டுவின் பிற தெருக்களைக் சார்ந்த ஜமாதாரின் பள்ளி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று கருதுகிறேன்.

2 ) 8 ஆம் வார்டில் அப்பா பாளி & மரைக்கார் பள்ளி ஜமாத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் குருவித்துறை பள்ளி ஜமாஅத் கைகாட்டிய நபர் (பெத்தா தாய்) வெற்றி பெறவில்லையா? ஜமாத்தினர் ஒட்டு போடவில்லையா ?

3 ) ஜமாத் தலையிட்டு சகோதரி பெத்தா தாய் வெற்றி பெற்றதனால்தானே இன்று அவர் மீது வந்துள்ள புகாரை உரிமையுடன் சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

(ஒருவேளை 7 ஆம் வார்டில் குருவித்துறை பள்ளி ஜமாத்திற்கு எதிராக போட்டியிட்ட சகோ., ரபீக் வெற்றி பெற்றிருந்தால், அவர் மீது புகார் வந்திருக்கும் பட்சத்தில் அவரை விசாரிக்க நமக்கு உரிமை இருக்குமா?)

4 ) நம் ஜமாத்தை சார்ந்தவர்தான் வரவேண்டும் என்று நினைக்காமல் எந்த ஜமாத்தை சார்ந்தவரானாலும் பரவாயில்லை தகுதி உள்ள நல்லவர் வரவேண்டும் என்ற பரந்த சிந்தனை வேண்டும்.

5 ௦) குருவித்துறை பள்ளி ஜமாத்தார்கள் சகோ. செய்து இபுறாஹீம் (ஜமாஅத் வேட்பாளர்) அவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் குருவித்துறை பள்ளியின் இந்த முடிவு தவறானதே எனபது என்னுடையே கருத்து.

அரசியல் என்பது சாக்கடையேதான். அதில் சந்தேகமில்லை. அதை சுத்தப்படுத்தும் முயற்சியில் வெளிப்படையான கொள்கைவுடன் (உள்நோக்கம் இல்லாமல்) இறங்கவேண்டுமே தவிர, சாக்கடை என்று எல்ல ஜமாத்தும் ஒதுங்கிவிட்டால், அங்கு பன்றிகள் வந்து குடியேறும். அப்புறம் லஞ்சம், ஊழல் என்று கூப்பாடு போட்டு வேலையில்லை.

Financier 6 ஆம் வார்டில் செலுத்திய கவனம் , அல்லது துணைத்தலைவர் தேர்வில் செலுத்திய கவனம் 7 ஆம் வார்டில் செலுத்தியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன். சரிதானா?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by seyed mohamed (Seyna) (Bangkok ) [21 November 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 13627

அஸ்ஸலாமு அழைக்கும்

அருமையான தீர்மானம்,

இது போல ஆலிம்களும் அரசியலில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது,

அரசியல் வாதிகள் பொய் பேசுபவர்கள் , அவர்களுக்கு உடந்தையாக ஆலிம்கள் செயல்பட்டாள் , அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகா வேண்டும் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பல வீணான கசப்பான சூழ்நிலைகள் உருவாக காரணமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13629

தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை! குருவித்துறைப்பள்ளி பொதுக்குழு முடிவு!! இந்த நல்ல செய்தி வரவேற்க வேண்டிய விசியம்...

இது போல் புது பள்ளி ஜமாத்தும் பொதுகுழு கூட்டப்பட்டு இப்படி ஒரு நல்ல தீர்மாணம் போட்டால் சிறந்தது...! நட்புடன் - புது பள்ளி ஜமாத்தில் ஒருவன்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13631

அல்ஹம்து லில்லாஹ். நல்ல முடிவு. சில விஷயங்கள் நடந்து முடிந்த பிறகுதான் தெரிகிறது. "சுட்டால்தானே தெரிகிறது, தொட்டால் சுடுவது நெருப்பென்று" என்று ஒரு கவிஞர் பாடுவார்.

கருத்தொற்றுமை ஏற்படவில்லை, ஒருவர் விட்டுக்கொடுக்க மறுக்கிறார் என்று தெரிந்த உடனேயே நிர்வாகம் அந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்க வேண்டும். அறிவு முதிர்ந்தவர்கள், அனுபவசாலிகள் சொல்வதை செவியேற்று இளைஞர்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

EGO என்ற ஒரு ஷைத்தான் எப்போதெல்லாம் நம்மை ஆட்கொள்கிறானோ அப்போதெல்லாம் இந்த எதிர்பாராத தோல்விகளுக்கு நாம் ஆளாகிறோம். இது குருவித்துறை பள்ளிக்கு மட்டுமல்ல,மற்ற தனி மனித முடிவுகளுக்கும் பொருந்தும்.

எண்ணத்தில் இக்லாஸ், பொதுநலத்தில் அக்கறை, விட்டுக்கொடுத்தல் விஷயத்தில் முன்னுரிமை இவற்றை பொதுநலத்தில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் கடைபிடித்தால் அல்லாஹ் சொன்ன, NASRUM MINALLAAHI VA FATHHUN QAREEB என்ற வெற்றியும் உதவியும் அல்லாஹ்விடத்திலிருந்து வரும். பிரிந்து நிற்பதை அல்லாஹ்வும் அவனது ரசூலும் எப்போதுமே ஆதரிப்பதில்லை.

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by suaidiya buhari (chennai) [21 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 13632

assalamualaikum

ஜமாதுக்கு அனைவர்களும் கட்டுபடுவது அவசியம். இல்லை என்றால் நமக்கு தான் கஷ்டம், நல தொரு வார்டு மெம்பெர் அமைவது கடினம். please மக்கள் அனைவரும் ஜாமத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது, நம் கடமை என்பதை அனைத்து ஜமதர்களும் புரிந்து செயல் படுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வேதனையான முடிவு
posted by Mauroof (Dubai) [21 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13635

இஸ்லாமிய சமூக/சமுதாய ஒழுங்கு கட்டமைப்பு என்ற விஷயத்தில் ஜமாஅத்தின் ஒன்றுபட்ட முடிவு என்பது மிக முக்கியமானது மட்டுமின்றி மக்களால் முழு மனதோடு அல்லாஹ்விற்காக ஏற்று நடைமுறையில் கொண்டுவரப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் நடைபெற்று முடிந்த காயல் நகராட்சி தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் குருவித்துறைப்பள்ளி உட்பட சில ஜமாஅத்துகள் முடிவு செய்து அறிவித்த வேட்பாளரை எதிர்த்து அந்த ஜமாஅத்தை சேர்ந்த சில சகோதரர்களே எதிர் போட்டியாளராக நின்றது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

இப்போட்டி வேட்பாளர்களின் செயல் ஜமாஅத்தில் அங்கம் வகிப்போர் மற்றும் நடுநிலையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதை போட்டியிட்டு தாங்களும் மன்னை கவ்வி ஜமாஅத்திற்க்கும் அவப்பெயர் பெற்றுத்தந்த சகோதரர்கள் என்ன விலை கொடுத்தாவது நீக்க முயற்சிக்க வேண்டும் வருங்காலங்களில். இல்லையெனில் அவர்கள் குற்றவாளிகளே குற்றவாளிகளே குற்றவாளிகளே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by T.M.RAHMATHULLAH (72) 21-11-2011 (KAYALPATNAM 04639 280852) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13644

அஸ்ஸலாமு அலைக்கும்.

குருவித்துறைப்பள்ளி ஜமாத் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது சரி என்று கூறுவதற்கில்லை. பொதுவாக நாம் எல்லோரும் சேர்ந்துதானே அந்த முடிவை எடுத்தோம். தவறு செய்தவருக்காக நாம் மஹல்லாவின் மஷூறா செய்யக்கூடாது என்று சொன்னால் சரியாகுமா? இந்த முடிவுகளை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.

இப்படியான பற்பல முடிவுகளை 40 / 50 வருடங்களாக பற்பல நல்லமல்கள் செய்ய வேண்டும் என்று தகுதியில் மேம்பட்ட பல நிர்வாகிகளாக இருந்த பல அல்லாமாக்கள் செய்த மஷூறாக்களை நாம் இன்று எப்படி அமுல்செய்கிறோம்? சற்று சிந்தித்தால் அல்லாஹ் விளக்கங்கள் கட்டாயமாக தருவான்.

ந்டந்தவைகளுக்காக நாம் அனைவரும் தவ்பா செய்யவேண்டும் அதும் கூட்டாக ஒரு தவ்பா நிகழ்ச்சி நட்த்த ஏற்பாடு பண்ணி நாம் செய்யும் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவது கட்டாயமாகிவிட்ட்து.

அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by M.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா) [21 November 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13645

அஸ்ஸலாமு அலைக்கும்.

வெறும் உப்பு சப்பு இல்லாத கண்டன தீர்மானம் மட்டும் போடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. குறைந்தபட்சம் அந்த நபரை கூப்பிட்டு அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

நமது முஹல்லாவின் பிரச்சனை மற்ற எல்லா முஹல்லாவுக்கும் ஒரு படிப்பினையாகி விட்டது. எனவே கடினமான நடவடிக்கை தீர்மானத்தை எதிர்பார்த்தேன். ஏமாற்றமே.

வஸ்ஸலாம். Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by A.Lukman.B.A., (kayalpatnam) [22 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13658

குருவிதுரைபள்ளி ஜமாத்தார்களுக்கு.

அஸ்ஸலாமு அழைக்கும் .

தயவுசெய்து தேர்தல் விசயத்தில் தங்கள் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். ஒவ்வருவரும் ஒதுங்கிக்கொண்டால் தீமை அதிகமாகுமே தவிர குறையாது. எங்கள் கோமான் ஜமாஅத் வெற்றிபேரவில்லையா. தலைவர் பதவிக்கு செலுத்திய கவனத்தை குறைந்தது 12 வார்டுகளில் நாம் சரியாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒவ்வொரு வார்டிலும் ஒரு நல்லவர் கிடைக்கமாட்டாரா?

அதோடு சரியான கட்டுப்பட்டையும் ஜமாத்துக்களில் கொண்டுவரவேண்டும். அதை மீறிய ரபீக் போன்றவர்களை வெறும் கண்டிப்புடன் விட்டுவிடாமல் இனி வரும் காலம்களில் அவரை போன்றவர்களுக்கு ஜமாஅத் எந்த விசயத்திலும் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கக்கூடாது.

இனி வரக்கூடிய காலங்களிலாவது இந்த முயற்சி எடுத்து நம் நகரமன்றதையும்,நம் நகர மக்களையும் காப்போமாக இன்ஷாஅல்லாஹ்.

அன்புடன் A .லுக்மான்
1 வது வார்டு கவுன்சிலர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re: தேர்தல் நடவடிக்கை முடிவு தவறானது
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [22 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13660

குருவித்துறை பள்ளிவாசல் முடிவு தவறானது. நாம் என்ன மாநில அரசியலிலா தலையிடுகிரோம் ? அல்லது மத்திய அரசியலில் தலையிடுகிரோமா? நம் ஊர் விசயத்தில்தானே தலையிடுகிரோம்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒதுங்கிக்கொண்டால், அது நம் ஊருக்கு நன்மையாக அமையாது. தீமையாகதான் அமையும்.. ஜமாத்தின் முடிவுக்கு ஒத்துழைக்காதவர் மீது நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் ஜமாத்திலிருந்து அவர்களை நீக்குவது உட்பட. தோல்வி பற்றி கவலைபடவேண்டாம். அது ஒரு படிப்பினைதான். இனிவரும் காலங்களில் நாம் நம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by K S Mohamed shuaib (Kayalpatinam) [22 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13662

குருவித்துறை பள்ளி ஜமாத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. அனுபவம் தந்த பாடம் என நினைக்கிறேன்.

பொதுவாக "வாக்களித்தல்" எனபது ஒருவனது அடிப்படை ஜீவாதார உரிமை. இதை எந்த ஒரு அமைப்பின் பெயராலோ நிறுவனத்தின் பெயராலோ அல்லது ஜாமாஅத் மற்றும் ஊர்நலகமிட்டி போன்ற அதிகாரமிக்க அமைப்பின் பெயராலோ கட்டுப்படுத்துவதோ ,அல்லது வரைமுறை செய்வதோ அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.

ஜமாஅத் கட்டுப்பாடுகள் வேறு வேறு விஷயங்களில் வேண்டுமானால் அமுல்படுத்திக்கொள்ளட்டும். தேர்தல் போன்ற ஒருவனது விருப்பம் சார்ந்த உரிமைகளில் தலையிடுவது முறையான காரியமல்ல.

இது சம்பந்தமாக யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் நமது ஜமாத்தினர்களின் நிலைமை மோசமாகிவிடும். இதை அறியாமல் ஜமாத் கட்டுப்பாடு வேண்டும் என்பவர்கள் எதையும் அறியாமல் சொல்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [22 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13667

ஒரு தோல்வியோ அல்லது தவறோ நடந்துவிட்டால், அது ஏன் நடந்தது? வரும் காலங்களில் அதை தவிர்ப்பது எப்படி? என்றுதான் சுயபரிசோதனை செய்யனுமே தவிர, இப்படி பானையை போட்டு உடைக்கக் கூடாது.

தயவுசெய்து தாங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

அனைத்து மக்களும் விரும்புவது வலுவான ஜமாத்தை தான்.

அனைத்து மற்ற பிரச்சனைகளை தவிர்த்து, இறைவனின் பொருத்தத்தை நாடி செயல்படுங்கள்.கண்டிப்பாக ஜெயம் உண்டு. வல்ல ரஹ்மானின் துணை நமக்கு என்றும் கிடைக்கும்.இன்ஷாஹ் அல்லாஹ்..

சில சகோதரர்கள், ஆலிம்கள் அரசியலில் நுழையக்கூடாது என்றும் கருத்து பதிவு செய்கிறார்கள். இது தவறு. கண்டிப்பாக ஆலிம்கள் அரசியலில் நுழைந்து, அனைவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கணும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்பத்தலைவராக, ஆன்மீகத் தலைவராக, படைத்தளபதியாக, அரசியல் தலைவராக, இப்படி அவர்கள் காட்டித் தராத ஒரு துறையே கிடையாது... அப்புறம் அதில் நுழையக்கூடாது, இதில் நுழையக்கூடாது என்றால் எப்படிங்க..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [22 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13669

இந்த தீர்மானம் ஆரோக்கிய மானதாக தெரியவில்லை. காரணம் இதுவே வருங்காலத்தில் சுயநலக்காரர்களுக்கும், ஒழுக்கமற்றவர்களுக்கும் வழியை திறந்துவிடும். நாம் அவர்கள் முன் கைகட்டி நிற்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

அதுமட்டுமல்லாமல் தற்போது 7 ம் வார்டை இழந்தது போல் நிரந்தரமாக நம் முஹல்லாவிற்கு உட்பட்ட எல்லா வார்டுகளையும் இழக்க நேரிடும்.

நமக்கு நடந்தது போல் நாம் விட்டுக்கொடுத்த மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி ஜமாதிற்கும் தேர்தலுக்கு முன்பே நடந்துள்ளது. அவர்களால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. ஆனால் நம் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்க பட்டிருப்பது ஆறுதலான விஷயம்.

நம் முஹல்லாவை எதிர்த்து 7 வது வார்டை அந்நியரிடம் ஒப்படைக்க காரணமானவரே நமது தீர்மானத்தால் நாளை நமது முஹல்லா விற்குற்பட்ட வார்டில் உறுப்பின ராக வர முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மாற்று மத சகோதரர்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [22 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13687

அஸ்ஸலாமு அலைக்கும்.. இந்த வாசகர் கருத்திலும், இதற்க்கு முந்திய தேர்தல் முடிவு சம்பந்தமான கருத்துகளிலும், பல வாசகர்கள், சகோதரர் அந்தோணி அவர்களை , தங்களையும் அறியாது, அன்னியர் என்று குறிப்பிட்டுள்ளது.. அவர் அன்னியர் அல்ல .. நமது மாற்று மத சகோதரர்.. அதுவும் நம் நகரமன்ற உறுப்பினர்..

ஒரு சமயம், அவரின் சேவை, நமது முந்தைய உறுப்பினரின் சேவையை விட வெளிப்படையானதாக,லஞ்சம் அட்ட்ரதாக இருக்கலாம்.. குருவித்துறை பள்ளி முஹல்ல உட்பட்ட ஏழாவது வார்டுக்கு, அதிக நல்ல திட்டங்களை கொண்டுவரலாம்., அவருக்கு கை கொடுத்து அனுசரித்து போவதே இப்போதைக்கு நல்லது..அடுத்த தேர்தலில், கற்ற பாடத்தில் இருந்து விடை பெறுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [23 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13693

REF: Comment Reference Number: 13687

அன்னியர் என்பது இங்கு பிரச்சனை இல்லை. நமது கருத்துக்களை தவறான திசையில் செலுத்தவேண்டாம்.

ஜமாஅத் வேட்பாளர் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதுதான் நமது ஆதங்கம். இது குருவித்துறை பள்ளிவாசல் ஜாமத்துக்கு மட்டும் என்றில்லை. எல்லா ஜமாதுக்கும்தான்.

பொதுவாக நம் ஊர் மக்களுக்கு வேட்பாளர்களின் தகுதி பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தந்த ஜமாத்துகள் கைகாட்டும் வேட்பாளர்களி நாம் ஆதரிக்கிறோம்/ஆதரிக்கவேண்டும்.

எனவே ஜமாஅத்துகள் நல்லவர்களை கைகாட்டுவதிலிருந்து ஒதுங்கி நிற்கக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில...
posted by ahmed meera thamby (kayal) [24 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13748

டாக்டர் கிசார்,அவர்களின் கருத்தும், தமிழர் இஸ்மாயிலின் கருத்தும் வரவேற்க தஹுந்தது. வரும் காலங்களில் எல்லாம் யோசித்து செயுங்கள். நன்றி

அஹ்மத் மக்காஹ்(காயல்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3297; Comments - 1]
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3303; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved