செய்தி எண் (ID #) 7597 | |  |
திங்கள், நவம்பர் 21, 2011 |
நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5262 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர்களின் கூட்டம் இன்று (21.11.2011) காலை 09.30 மணிக்கு, நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 98.99இன் படியும் / 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 73/94இன் படி, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் தலைமை அலுவலரும், நகர்மன்ற ஆணையரும் (பொறுப்பு) ஆன கண்ணையா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு தேர்தல்:
துவக்கமாக வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழுக்கான தேர்தல் நடைபெற்றது. நான்கு உறுப்பினர் பொறுப்பிடங்களைக் கொண்ட இக்குழுவிற்கு போட்டியிட்ட
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹைதீன் 15 வாக்குகளும்,
07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி 13 வாக்குகளும்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா 07 வாக்குகளும்,
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா 14 வாக்குகளும்,
17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் 16 வாக்குகளும் பெற்றனர். இந்த ஐவரில், குறைந்த வாக்குகளைப் பெற்ற 09ஆவது வர்ர்டு உறுப்பினர் ஹைரிய்யாவைத் தவிர மற்ற அனைவரும் இக்குழுவின் நான்கு பொறுப்பிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

பணி நியமனக் குழு தேர்தல்:
அடுத்து பணி நியமனக் குழு தேர்தல் நடைபெற்றது. ஓர் உறுப்பினர் பொறுப்பிடத்தைக் கொண்ட இக்குழுவிற்கு போட்டியிட்ட
01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் 07 வாக்குகள் பெற்றார்.
16ஆவது வார்டு உறுப்பினர் சாமு ஷிஹாபுத்தீன் 11 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஒப்பந்தக் குழு தேர்தல்:
இறுதியாக ஒப்பந்தக் குழு தேர்தல் நடைபெற்றது. ஓர் உறுப்பினர் பொறுப்பிடத்தைக் கொண்ட இக்குழுவிற்கு போட்டியிட்ட
10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் 13 வாக்குகளும்,
15ஆவது வார்டு உறுப்பினர் ஜமால் 04 வாக்குகளும் பெற்றனர்.
ஒரு செல்லாத ஓட்டும் பதிவானது. இறுதியில் பத்ருல் ஹக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். |