கடந்த 18.11.2011 வெள்ளிக்கிழமையன்று, தேசிய நூலக வார விழா காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, அதனை இணைந்து நடத்திய காயல்பட்டினம் அரசு பொதுநூலக வாசகர் வட்டம் சார்பில், முன்னதாக பள்ளி - கல்லூரிகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மற்றும் கலந்துகொண்ட மாணவ-மாணவியருக்கு விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கட்டுரைப் போட்டியின் முதல் பிரிவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களான எம்.எச்.முஹம்மத் அபூபக்கர், “வாசிக்க வாசிக்க வானமும் வசப்படும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதலிடமும், அதே போட்டியின் இரண்டாவது பிரிவில், அதே பள்ளியின் எம்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற மாணவர், “நூலக விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதலிடம் பெற்றிருந்தனர்.
இவ்விரு மாணவர்களையும் பாராட்டி, அவர்கள் சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளியில் மாணவர் ஒன்றுகூடலின்போது சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சாதனை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆங்கில இளநிலை ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |