இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு தாயகம் திரும்பும் மன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஹாஜிகளை வரவேற்று திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர், செயலர் ‘ஸ்கட்‘ அபூபக்கர் ஸித்தீக், பொருளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள வரவேற்பறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பேரருளால் இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை இனிதே நிறைவேற்றி, தாயகம் திரும்பும் எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை, அவரது குடும்பத்தார் மற்றும் குழுவினர் உள்ளிட்ட - காயல்பட்டினத்திலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்று திரும்பும் அனைத்து ஹாஜிகளையும் அகமகிழ வரவேற்கின்றோம்.
கருணையுள்ள அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக்கி, அண்ணலாரின் அமுத வாக்கிற்கேற்ப அன்று பிறந்த பாலகர்களாய் பாவங்கள் களைந்து பாக்கியமுடன் திரும்பச் செய்வானாக, ஆமீன்.
இவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர், செயலர் ‘ஸ்கட்‘ அபூபக்கர் ஸித்தீக், பொருளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘ஸ்கட்‘ அபூபக்கர் ஸித்தீக்,
செயலாளர்,
காயல் நல மன்றம்,
திருவனந்தபுரம், கேரள மாநிலம். |