நடப்பு மழைப்பருவம் காரணமாக காயல்பட்டினத்தில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, 22.11.2011 அன்று நடைபெற்ற நகர்மன்ற மாதாந்திர கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் உறுப்பினர்கள் முறையிட்டதையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் அவர் விளக்கம் கேட்டார். மருந்தடிக்கும் கருவியில் பழுது ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் அப்போது தெரிவித்தார்.
மழைக்கால துவக்கத்திலிருந்தே இதே விளக்கம்தான் தரப்படுகிறதென்றும், விரைந்து அதன் பழுதை சரிசெய்து, நகர் முழுக்க மருந்துப்புகையடிக்க ஆவன செய்யுமாறும் நகர்மன்றத் தலைவர் அப்போது உத்தரவிட்டார்.
அதனையடுத்து, அக்கருவியின் பழுது சரிசெய்யப்பட்டு, 24.11.2011 முதல் நகர வீதிகளில் மருந்துப் புகையடிக்கப்பட்டு வருகிறது.
|