காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (Kayalpatnam Chennai Guidance Centre - KCGC) - கடந்த ஜூலை மாதம் சென்னையில் துவக்கப்பட்டது. நான்கு குழுக்களாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழு சார்பாக KayalJobs.com என்ற இணையதளம் கடந்த சனிக்கிழமை அன்று (நவம்பர் 26) துவக்கிவைக்கப்பட்டது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள KCGC அலுவலகத்தின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் தலைவர் பி.எம்.ஐ. ஆபிதா சேக் - சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
இறைமறையின் சில வசனங்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக - வேலைவாய்ப்புக்குழு உறுப்பினர் எம்.என். அப்துல் காதர் (முத்து வாப்பா) வரவேற்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து - ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஆடிட்டர் எஸ்.எஸ். அஹ்மத் ரிபாய் - KCGC குறித்த அறிமுகவுரையாற்றினார்.
அடுத்து - வேலைவாய்ப்புகள் குறித்த இணையதளம் KayalJobs.com துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் ஆபிதா அதிகாரப்பூர்வமாக இவ்விணையதளத்தை துவக்கி வைக்க, வேலைவாய்ப்பு குழு உறுப்பினர் பாளையம் முஹம்மது சுலைமான் - இணையதள சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் சிறப்புரையாற்றினார். அதன் வீடியோ தொகுப்பினை காண இங்கு அழுத்தவும்.
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஹெச்.என். சதக்கத்துல்லாஹ் - சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இறுதியாக் வேலைவாய்ப்பு குழு உறுப்பினர் குளம் முஹம்மது இப்ராஹிம் நன்றி கூற, துஆ - கஃப்பாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் KCGC இன் நான்கு குழுக்களின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
தகவல்: முஹம்மது முக்தார்,
ஒருங்கிணைப்பு குழு, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC).
1. தேவைக்கேற்ற சேவை posted bySalai Sheikh Saleem (Dubai)[28 November 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13879
காலத்திற்கேற்ற சேவைக்கு பாராட்டுக்கள். உங்களின் இந்த சீரான பணிகள் தொய்வின்றி தொடருமானால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நமது சமூகம் பொருளாதாரத்தில் சுய தேவைகளை அடைந்திருக்கும் இன்ஷா அல்லாஹ். மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் நம்மவர்கள் பலர் பொருளாதார சீர்கேட்டினால் பணிகளை இழந்து எதிர்காலத்தில் என்ன செய்வது என்று ஒன்னும் புரியாமல் தாயகம் திரும்புகிறார்கள். இவர்களுக்கும் இந்த மாதிரி அமைப்பு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. (இந்த சேவை எங்களுக்கும் பொருந்தும் தானே ? )
இதே போல் நமது ஊரிலும் CAREER GUIDANCE சிற்கு ஒரு எல்லா வசதிகளும் அமையப்பெற்ற தனி கட்டடம் கட்டப்பட வேண்டும். இதில் 9 ஆம் வகுப்பிலிருந்தே ஊரில் உள்ள எல்லா மாணாக்கர்களுக்கும் வழிகாட்டுதல்கள் கொடுத்து அதில் திறம்பட செயல்படும் மாணாக்கர்களை நாமே தத்தெடுத்து மருத்துவம் மற்றும் பொறியியல் மட்டுமே தொழிற்கல்வி என்று இன்றும் நினைத்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்தின் போக்கை மாற்ற வேண்டும்
இந்த வழிகாட்டுதலிர்க்கு யாரவது முன்வருவானார்களா? இதனை தலைமை என்று நடத்த நான் தயார்? சொல்லுங்கள் எதனை பேர் உள்ளீர்கள்?
2. நகர்மன்ற தலைவர் ஆபிதா அவர்கள் இவ்விணையதளத்தை துவக்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.. posted byM.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்)[29 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13886
காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அழைப்பின் பேரில் நகர்மன்ற தலைவர் ஆபிதா அவர்கள் இவ்விணையதளத்தை துவக்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.. KayalJobs.com இணையதள சேவைகள் நமதூர் மக்களுக்கு பயன் உள்ளதாக அமைந்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட நாம் அனைவர்களும் துவா செய்வோமாக... ஆமின்.
KCGC யின் அணைத்து அன்பர்களுக்கும் எனது மனதார வாழ்த்துக்கள்...
3. முன்மாதிரி posted byMauroof (Dubai)[29 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13889
இன்றைய சூழலில் KCGC - ன் இந்த JOB SITE துவக்கப்பணி உலகெங்கும் உள்ள பிற காயல் நல மன்றங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாம்/இருக்கிறது/இருக்கும் என்றால் அது மிகை ஆகாது. தங்களது எல்லா நற்பணிகளும் சிறக்க வாழ்த்துக்கள்.
4. அல் ஹம்துலில்லாஹ்..... posted byS.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah- KSA.)[29 November 2011] IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13893
இது ஒரு அருமையான....நல்ல ஒரு தொடக்கம்....வல்ல அல்லாஹு...தங்கள் யாவருக்கும்...நர்கூலீயை....தருவானாக.....
நம் அருமை...காயல் மாணவர்கள்....& மக்கள்...இந்த அருமையான....வாய்ப்பை...பயன்.....படுத்தி......கொள்ள...வேண்டுகிறேன்.....
5. Re:KayalJobs.com இணையதளத்தை ... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[29 November 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13899
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் முதலில் பாராட்டுவோம்.... THANK'S .... இது ஒரு பாராட்டு கூறிய....நல்ல செய்தி.<<<<< வல்ல நாயன் >>>>இந்த நல்ல முயற்சியை மேலும் சிறப்பாக்கி அருள் வானாகவும் ஆமீன். ( இது ஒரு நல்ல SITE .)
நம் ஊர் மக்கள் &முக்கியமாக நம் ஊர் மாணவர்களும் இந்த நல்ல வாய்ப்பை.பயன்படுத்தி.கொள்ளலாமே. நிச்சயமாக நம் ஊர் வாசிகள் பயன்படுத்துவர்கள் என்று நாம் நம்புவோம்.
நம் ஊர் தலைவி ஆபிதா அவர்கள் சென்னை போனது நமக்கு எல்லாம் ரொம்ப நல்லதாகத்தான் உள்ளது . மேலும் இவர் முலம் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
6. Re:KayalJobs.com இணையதளத்தை ... posted bysuaidiya buhari (chennai)[29 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13901
assalamualaikum
இந்த வலைதளம் காயல் மக்கள் அனைவர்க்கும் ரொன்ப உதவியாக இருக்கும் எண்டு நம்புகின்றேன். இதை போண்டு மற்ற உள்ளூர் & வெளிநாடு அமைபபுகளும் அவர்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை படும்போது இந்த வலைதளதை use பண்ணலாமா? என்பதை தெளிவு படுத்தவும்.
7. How To Post any Job Openings in that Site??? posted byMohamed Hussain (Chennai)[29 November 2011] IP: 125.*.*.* India | Comment Reference Number: 13904
Assalamu Alaikum
This is long awaited one. Insha ALLAH , in future this site will hit success and will Provide information about the job openings continuously to whom seeking better Job.
One More Thing, How to post Job openings if we know about it.Is there anyway to post it?
8. Re:KayalJobs.com இணையதளத்தை ... posted byMashoor.M.M (Gujarat)[29 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13906
மாஷா அல்லாஹ்..நல்ல முயற்சி .....துவக்கமே தூள்...
தங்கள் பணியின்மூலம் நம் நகரமக்கள் நல்ல பொருளாதார முன்னேற்றம் அடைய வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
kayalJobs .com வெற்றியடைய வாழ்த்துக்கள்..
நம் காயல் நகர இன்றைய இளைய தலை முறையினருக்கு தேவையான மிக உன்னதமான ஒரு சேவை . உங்களின் நல்ல சேவைகள், நல்ல முறையில் நம் மக்களக்கு பயன் தர வல்ல நாயன் அருள் புரிவான ஆமீன் .
உங்களது நல்ல சேவைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
11. Re:KayalJobs.com இணையதளத்தை ... posted bymackie noohuthambi (kayalpatnam)[29 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13923
இந்த இணைய தளத்தில் ஒரு மாடல் வேலைவாய்ப்பு பற்றிய விபரம் வெளியிட்டால் நல்லது. யார் யார் இதை இணையத்தளத்தில் பார்க்க முடியும் இணையதள சேவை இல்லாதவர்கள் ஏழை மாணவர்கள் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருப்பவர்கள் கடிதம் மூலம் தங்கள் BIO DATA க்களை அனுப்பி தகவல் பெற முடியுமா அதற்கான வசதிகளையும் செய்து கொடுங்கள்.
இப்படி ஒரு சேவை கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருந்தால் என் போன்றவர்கள் பயன் அடைந்திருக்க முடியும். நல்ல சிந்தனைகள், உயர்ந்த நோக்கங்கள் நீரூற்றாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
13. Re:KayalJobs.com இணையதளத்தை ... posted byM.A.C. AHAMED THAHIR (NEW DELHI)[29 November 2011] IP: 27.*.*.* India | Comment Reference Number: 13928
அஸ்ஸலாமு அழைக்கும்.
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்..!! இந்த நிகழ்வை பார்க்கையில் மிக மிக சந்தோஷமாக உள்ளது.
இது போன்ற வேலை வாய்ப்பு சம்பந்த பட்ட வலைத்தளம் கண்டிப்பாக இருப்பது அவசியம் தான். வேலை வாய்ப்பு என்பது மிகவும் திண்டாட்டமாக உள்ள இக்காலத்தில் இது போன்ற ஒரு வலை தளம் கண்டிப்பாக நம் இளைய சமுதாயத்தினருக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும். மேலும் படித்து முடித்து மன குழப்பம் இல்லாமல் உறுதியுடன் வேலை தேட நம் மக்களுக்கு இது உதவும்.
இப்பொழுதெல்லாம் படித்து முடித்து வேலைக்காக அலைந்து திரிந்து இறுதியில் அவர்கள் விரக்தி அடைந்து பல தவறான வழிகளில் ஈடுபடுபவர்களும் கணிசமான அளவு வளர்ந்து வருகிறார்கள். மேலும் வேலை இல்லாமல் ஊரிலேயே ஊதாரித்தனமாக ஊரு சுத்தி கெடுகிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணியாக இருப்பவை மன உறுதி இல்லாமை, வேலை கிடைக்க வில்லை என்ற தாழ்வு மனப்பான்மை, சரியான நேரங்களில் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் கிடைக்காமல் இருப்பது தான் இதன் முக்கிய காரணியாக அமைகிறது.
இந்த சோகமான நேரத்தில் தான் இந்த KAYAL JOBS.COM - மின் வருகை அமைகிறது மாஷா அல்லாஹ. இது கண்டிப்பாக நம்ம இளைய சமுதாயத்துக்கு நல்ல ஊக்கமும் ஆக்கமும் மற்றும் இல்லாமல் நல்ல மன தைரியம் தன்னம்பிக்கை உருவாக வழிவகை காணும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் இந்த வலைதலத்திறப்பு நிகழ்வை நம்ம ஊரின் புதிய தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தது இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது மாஷா அல்லாஹ்..
இவ்வாறு பல நபர்கள் செய்யும் சேவை மனப்பான்மை தான் நம் இளைய சமூகத்தை மிக உயரிய நிலைமையில் கொண்டு சேர்க்கும். இது போன்ற சேவை என்றும் அழியாமல் நிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..
அல்லாஹ் அவர்கள் யாவருக்கும் மேலான நற்கூலியை வழங்கி அருள் புரிவானாகவும் ஆமீன்.
அன்புடன்
M.A.C. அஹ்மது தாஹிர்
புதுடெல்லி.
Moderator: சில வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross