காயல்பட்டினத்தில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. மதியம் 02.00 மணிவாக்கில் அது கனமழையாக உருவெடுத்து, மாலை 04.45 மணி வரை நீடித்தது. பின்னர் மீண்டும் சாரல் மழையாக தற்போது (நேரம் 18.30 மணி) வரை பெய்து வருகிறது.
இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பதிவான செயற்கைக்கோள் படத்தின்படி, நகரில் கனமழை நீடிக்கும் என்றே தெரிகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் இன்றைய (27.11.2011) மழைபொழிவளவு பட்டியல் பின்வருமாறு:-
திருச்செந்தூர் - 78 மிமீ
காயல்பட்டினம் - 95 மிமீ
குலசேகரன்பட்டினம் - 61 மிமீ
விளாத்திகுளம் - 52 மிமீ
காடல்குடி - 35 மிமீ
வைப்பார் - 94 மிமீ
சூரங்குடி - 18.20மிமீ
கயத்தார் - 47 மிமீ
கடம்பூர் - 138 மிமீ
கழுகுமலை - 80 மிமீ
கோவில்பட்டி - 109 மிமீ
ஓட்டப்பிடாரம் - 105 மிமீ
மணியாச்சி - 108 மிமீ
வேடநத்தம் - 55.50 மிமீ
கீழஅரசரடி - 40 மிமீ
எட்டையபுரம் - 91 மிமீ
ஸ்ரீவைகுண்டம் - 69 மிமீ
சாத்தான்குளம் - 43 மிமீ
தூத்துக்குடி - 92 மிமீ
மொத்த மழையளவு - 1,410.70 மிமீ
சராசரி மழையளவு – 74.25 மிமீ
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடம்பூரிலும், அதனையடுத்து கோவில்பட்டியிலும் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. |