காயல்பட்டின தஃவா சென்டரில் நேற்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
நமது தஃவா சென்டர் மூலம் நடத்தப்பட்டு வருகின்ற தொடர் தர்பிய்யா வகுப்பான தஃவா பயிற்சி பற்றையின் 2-வகுப்பு 27-11-2011 காலை முதல் மாலை நடைப் பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கல்லூயில் படிக்கும் மாணவர்கள், வேலை செய்பவர்கள், மற்றும் உயர் பதவி வகிப்பவர்கள் ஆவர்.
வகுப்பில் முதலாவதாக சென்ற வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றிய தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி அவர்கள் உளத்தூய்மை பெறுவதற்காக தியாகம் என்ற தலைப்பில் பாடம் நடத்தினார்கள். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சத்திய
ஸஹாபாக்களும் இந்த மார்க்கத்தை நிலைநாட்ட எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை மிக உருக்கமாக சொன்னார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தின சிறப்பு தஃவா பயிற்சி ஆசிரியராக வருகை தந்திருந்த முன்னாள் பெந்தயகோஸ்த் பாஸ்டர் விஜயன் என்ற உமர் ஃபாரூக் அவர்கள் வகுப்பை தொடர்ந்தார்கள். வகுப்பின் முக்கிய தலைப்பாக இயேசு இறைவனின் மகனா?, கிறிஸ்துவர்களின் வேதம் என்று செல்லப்படும் பைபிள் இறைவனால் அருளப்பட்டதா? இயேசுவின் மார்க்கம் இஸ்லாமா? அல்லது கிறிஸ்துவமா? மேலும் அன்னிய பாசை, சிலுவைப்பலி, அற்புதங்கள் ஆகியவன பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் அளித்து பார்வையாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
பின் சகோதரர் பிலால் அவர்கள் நபிவழி பிரார்த்தனை என்ற அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆக்களை மனனம் செய்ய பணித்தார்கள். இதில் சென்ற முதல் வகுப்பில் மனனம் செய்ய தந்த துஆக்களை அனைவரும் சிறந்த முறையில் மனனம் செய்திருந்தது குறிப்பிடதக்கது அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சியின் இறுதியாக தஃவா சென்டர் பெண்கள் பகுதி மாணவிகள் கிறிஸ்துவம் பற்றிய தங்களின் கேள்விகளை சகோதரர் உமர் ஃபாரூக் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.
இன்ஷாஅல்லா தொடர் தர்பிய்யாவின் 3ஆம் வகுப்பு (தஃவா பயிற்சி) வருகிற டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நமது தஃவா சென்டரில் வைத்து நடைபெறயுள்ளது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|