இன்று நள்ளிரவில் பெய்த அளவுக்கதிகமான கனமழை காரணமாக, காயல்பட்டினம் 08ஆவது வார்டுக்குட்பட்ட சுலைமான் நகர் என்றழைக்கப்படும் மாட்டுக்குளம் பகுதியில், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதனால் பாதிப்பிற்குள்ளான அப்பகுதி பொதுமக்கள் தமது நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாயிடம் முறையிட்டனர். அவர் நகர்மன்றத் தலைவர் ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில், இன்று காலை 10.00 மணிக்கு அவ்விடத்திற்கு இருவரும் விரைந்து வந்தனர்.
போர்க்கால அடிப்படையில், பொக்லைன் வாகனத்தைக் கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள நீரை கடலுக்கு வெட்டிவிடுமாறு நகர்மன்றத் தலைவர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) கண்ணையா தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன் மேற்பார்வையில், அப்பகுதியில் தேங்கியிருந்த நீர் கடலுக்கு வெட்டிவிடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் நிஸார், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும், நகர்மன்ற உறுப்பினர்கள் ஹைரிய்யா, பத்ருல் ஹக், பாக்கிய ஷீலா, அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தகவல்:
பாட்டா சதக் உமர்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
கவுன்சிலர் பத்ருல் ஹக்
மற்றும்
மாஷாஅல்லாஹ் டிஜிட்டல்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |