காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த Cancer Fact Finding Committee - CFFC யின் ஆய்வறிக்கை, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பான Cancer Fact Finding Committee - CFFCயின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள ஆய்வறிக்கை, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் 01.12.2011 அன்று தாய்லாந்ததிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அம்மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், செயற்குழு உறுப்பினர் தாய்நாடு செய்யித் ஆகியோரிணைந்து, தாய்லாந்துக்கான இந்திய தூதர் அனில் வாத்வா அவர்களிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
அது தொடர்பான துறை அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பிப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பாக,
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |