அண்மையில் பெய்த கனமழை காரணமாக நகரில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கால்நடை அரசு மருத்துவமனை நுழைவாயிலையொட்டியுள்ள தாழ்வான பகுதியில் மழை நீர் பெருமளவில் தேங்கியுள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டுக்குட்பட்ட அப்பகுதியின் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் முயற்சியில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உத்தரவுப்படி மோட்டார் பம்ப்செட் உறிஞ்சி கொண்டு, அப்பகுதியில் தேங்கிய மழை நீர், 02.12.2011 அன்று மாலை 04.00 மணியளவில் அப்புறப்படுத்தப்பட்டது.
படம்:
வாவு SAR அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ,
காயல்பட்டினம்.
1. Re:கால்நடை மருத்துவமனை அருகி... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[04 December 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14131
காக்கா எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அவர்களுக்கும், தலைவி மற்றும் அனைவர்களுக்கும் நன்றிகள்.
காக்கா, இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வை காணுங்களேன்.
நாளை மீண்டும் அதிக மழை பொழிந்தால், திரும்பவும் மோட்டார் போட்டு உறிஞ்சனும்,அல்லது பொக்லைன் கொண்டு நோன்டனும். எத்தனை நாளைக்கு இப்படியே போவது. கொஞ்சம் முயற்சி செய்யுங்களேன், நிரந்தர தீர்வுக்கு.
2. யானை குளிக்கலாம் posted byshahul hameed sak (malaysia )[04 December 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 14140
சில வருடங்களுக்கு முன்பு காயல் பஸ் நிலையத்தில் இது போன்ற மழை காலத்தில் யானை ஒன்று நல்ல சோக்காக
படுத்துக்கொண்டு குளிக்கும் காட்ச்சிப்படம் இங்கு மலேசியா நண்பன் பத்திரிக்கையில் பார்த்து ரொம்ப குதூகலம் அடைந்தேன். ஏன் இப்படி சில்லரையாக நேரத்தையும், பணத்தையும் செலவழித்து....?இந்த மழை காலத்திற்கு பிறகு
நிரந்தர தீர்வு கண்டு நிரந்தர பாராட்டை பெறுங்களேன்.
3. Re:கால்நடை மருத்துவமனை அருகி... posted byPS ABDUL KADER (jeddah)[04 December 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14147
எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மச்சான், தங்களின் வார்டுக்கு உள்பட்ட பகுதயில் மழைநீர் தண்ணியை இன்று மோட்டார் போட்டு உறிஞ்சனும் என்று நகர தலைவிக்கு சொல்லி அகட்டிவிட்டீர்.
நாளை அதிக மழை வந்தால் திரும்ப தண்ணீர் தங்காது இருக்குமா?
மச்சான் - இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வு கானவழி பழைய வீடு உடைத்த கல்,மணல் ரபிஷ் நமதூர் வீதி முன் கொட்டிகடகும் அதை நகராச்சி வகனம் மூலம் கொண்டு வந்து தாழ்வான பகுதி பக்கம் போட்டு நிரப்ப ஏற்பாடு செய்ய செய்யுங்களேன்.
4. Re:கால்நடை மருத்துவமனை அருகி... posted byM Sajith (DUBAI)[05 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14150
நிரந்திர தீர்வு எங்கிருந்து வரும் என்பதுதான் புரியவில்லை..!!
காணாமல் போன குளங்களை கண்டுபிடிப்பதிலா - அதில் பெரும் பகுதி வீடாகிவிட்டது..
பாதாள சாக்கடை திட்டத்திலா? - இது கடலுக்கு தண்ணீர் வடிய உதவலாம் ஆனால் அதோடு வரும் 'பேக்கேஜ்' அதுவும் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் நம்மவர்களின் மனோபாவம் கேட்கவே வேண்டாம்.. பன்றிகள் துவங்கி எல்லாம் நம் தெரு வழிகளை வருடம் முழுவதும் நாறடித்துவிடும், இதற்கு ஒரு சீசனில் மட்டுமே தேங்கும் மழை நீரே தேவலாம்.
ஒரு ஐடியா?
தினமும் குப்பை அள்ளுவது, ரோடு போடுவது போல இதுவும் ஒரு அன்றாட பிரச்சினை ஆகிவிட்டதால், ஊரில் எங்கு தண்ணீர் தேங்கினாலும் அதை மோட்டார் பம்பு மூலம் உரிஞ்சுவதையும் காண்ட்ராக்ட் விட்டுவிடலாம் ...
இதனால் யாருக்காவது நல்ல பிழைப்பாகி போகும்... என்ன... மழை இல்லாத காலத்தில் அவர் காட்டில மழைன்னு கொஞம் எஞ்சாய் பன்னுவார்..!!
5. ஐயா இந்த உறுப்பினர் என்ன.. பெருசா செய்ச்சிட்டாறு...! posted by தமிழன்.. முத்து இஸ்மாயில் - காயல்பட்டிணம் (காயல்பட்டினம்)[05 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14158
அப்படி என்னத்த ஐயா இந்த உறுப்பினர் பெருசா செய்ச்சிட்டாறு தேங்கிய நீரை பம்பு செட்டு வைத்து நீரை வெளியேத்தி இருக்கிறாரு...! இது இன்னமோ பெரிய இமயமலை சாதனை மாதிரி செய்தியாய் போடுறீங்களே... அட்மின் அவர்களே... உருப்படியான நல்ல நிரந்தரமான பெயர் சொல்ல கூடிய சாதனைகள் உறுப்பினர்கள் செய்தால் மட்டும் செய்தி தாருங்கள்..
நகர்மன்றத்தில் மக்களை ஒன்றுக்கு நான்கு முறை அலைய விடாமல் (அதன் நிர்ணய கட்டணத்தை தவிர) பணம் செலவு இல்லாமல் பிறப்பு, இறப்பு சான்றிதல் மக்களுக்கு பெற்று கொடுத்தாலே போதும்...
6. Re:கால்நடை மருத்துவமனை அருகி... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[05 December 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14159
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ். நம் மரியாதையை கூறிய.13வது வார்டு. கவுன்சிலர். ஜனாப்.M.S.M.ஷம்சுத்தீன் ஹாஜி அவர்களின் நல்ல முயற்சியிலும் AND நமக்கு கிடைத்த சுறு சுறுப்பான நமது ஊர் . தலைவி. I .ஆபிதா அவர்களின் முழு ஆதரவுடன் இவ்வளவு சீக்கிரமாக பம்ப்செட் மூலம் தேங்கிய மழை நீர் நீரை அப்புறப்படுத்திய இவர்களுக்கு நம் ஊர் மக்கள்கள் நிச்சியம் ***THANKS*** சொல்லியாகனும். காரணம் பஸ் ஸ்டாண்ட் ஆக இருப்பதால்தான்.
பொதுவாக இப்போதைய கால கட்டத்தில் நமக்கு கிடைத்த. கவுன்சிலர்கள் நல்ல சுறு சுறுப்பானவர்கள் . மாஷா அல்லாஹ்
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross