காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தாரங்கதாரா கெமிக்கல் வெர்க்ஸ் (DCW) நிறுவனம் தனது உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் 29.11.2011 அன்று காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள முத்து அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவல் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் Cancer Fact Finding Committee - CFFC சார்பிலும், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கம், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம்., காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT), கோமான் ஜமாஅத் ஆகியவற்றின் சார்பிலும் அவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, மேற்படி தொழிற்சாலை சட்ட விதிகளை மீறி செயல்படுவதாகவும், எனவே அதன் நடப்பு நடவடிக்கைகளே சட்டத்திற்குப் புறம்பாக இருக்கையில், புதிய விரிவாக்கம், உற்பத்திப் பெருக்கம் என எதற்கும் அனுமதியளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்திப் பேசினர்.
அக்கூட்டம் நிறைவுற்ற பின்னர், CFFC சார்பில், ஆதார ஆவணங்கள் அடங்கிய கோரிக்கை மனுவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.
நடைபெற்ற பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம் குறித்து, அடுத்தடுத்த நாட்களில் செய்தித்தாள் ஊடகங்கள் மற்றும் வலைதள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உங்கள் பார்வைக்கு:-
தினகரன் நாளிதழில்...
தினமணி நாளிதழில்...
இணையதள செய்திக்கு இங்கு அழுத்தவும்
தி ஹிந்து ஆங்கில நாளிதழில்... (பாகம் 1)
இணையதள செய்திக்கு இங்கு அழுத்தவும்
தி ஹிந்து ஆங்கில நாளிதழில்... (பாகம் 2)
www.tutyonline.com வலைதளத்தில் (செய்தி 1)
இணையதள செய்திக்கு இங்கு அழுத்தவும்
www.tutyonline.com வலைதளத்தில் (செய்தி 2)
இணையதள செய்திக்கு இங்கு அழுத்தவும்
|