முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ரூபாய் 7 லட்சத்து 12 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 04.12.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் அரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அதன் நிர்வாகி ஜுவல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோர், அதிமுகவைச் சார்ந்த பள்ளத்தூர் முருகேசன், ராமச்சந்திரன், எஸ்.எம்.செய்யது காசிம், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், என்.எம்.அஹ்மத் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சாமு ஹஸீனா தமிழாக்கத்துடன் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாவட்ட அலுவலர் ராஜேஷ்வரி அனைவரையும் வரவேற்றார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான அ.வஹீதா திட்ட விளக்கவுரையாற்றினார். துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 118 ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ஏழு லட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எம்.ஜஹாங்கீர், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், அதன் துணைச் செயலாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், சின்னத்தம்பி, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் உள்ளிட்ட நகர பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் சார்பில் ஒரு தொகை வசூலித்து ஒப்படைக்கப்பட்டால், அதேபோன்ற தொகை மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவால் வழங்கப்படும் என்பது இத்திட்டத்தின் குறிக்கோள். ஆனால், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில், காயல்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களிலுள்ள பிரமுகர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய் 7,12,000 மட்டுமே இவ்விழாவில் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது. அரசின் சார்பில் தரப்பட வேண்டிய இணைத்தொகை விரைவில் தரப்படும் என விழாவில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி திருத்தப்பட்டது. (05.12.2011 - 21:20hrs) |