துபை இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் - ஈமான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அமீரக தேசிய தின விழா மற்றும் அமைப்பின் ஆண்டுவிழாவில், வழமைபோல இவ்வாண்டும் காயலர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்வுகள் குறித்து, சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தேசிய தினம் - 3 நாட்கள் விடுமுறை:
டிசம்பர் மாதம் 02ஆம் தேதி அமீரகத்தின் 40ஆவது தேசிய தினம் மிகப்பிரமாண்டமான முறையில் அமீரகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அமீரகத்தில் உள்ள எல்லா அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இஸ்லாமிய புது வருடம் மற்றும் அமீரக தேசிய தினத்திற்காக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஈமான் சங்க விழா:
எல்லா வருடங்களையும் போல் இந்த வருடமும், அமீரத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் ஈமான் சங்கம் தனது 36 வது ஆண்டு துவக்க விழாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 40ஆவது தேசிய தின விழாவையும் சேர்த்து சிறப்பாக கொண்டாடியது.
துபாய், கவாநீஜ் பகுதியில் அமைந்துள்ள முஷ்ரிஃப் பூங்காவில் டிசம்பர் 02ஆம் தேதி அன்று மிக சிறப்பான ஏற்பாடுகளுடன் கொண்டாட்டங்கள் துவங்கின.
இ.டி.ஏ. எம்.டி. ஸலாஹுத்தீன் தலைமையில்...
காலை முதல் பெரியோர்களுக்கான இன்சுவை நிகழ்சிகளும், சிறுவர் சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்சிகளும் நடந்தன. ஜும்மா தொழுகை இடைவேளைக்குப்பிறகு மதிய உணவுடன் ஆண்டு விழா நிகழ்சிகள் துவங்கின. விழாவிற்கு ஈமான் அமைப்பின் தலைவர் ETA அஸ்கான் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ஜனாப் செய்யத் M சலாஹுதீன் காக்கா அவர்கள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள்.
அப்துர்ரஹ்மான் எம்.பி. சிறப்பு விருந்தினராக...
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈமான் சங்கத்தின் துணைத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அயலகப் பிரிவான காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், நமது ஊருக்கு மிகவும் பரிச்சியமானவருமான அல்ஹாஜ் M அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து வந்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் CFFC குழுவினர் / காயலர்கள் சந்திப்பு:
இந்நிகழ்ச்சியில் காயலரகள் பெருமளவில் கலந்துகொண்டனர். CFFCயின் சார்பில் சாளை ஷேய்க் ஸலீம், யஹ்யா முஹ்யித்தீன், எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், Dr.செய்யித் அஹ்மத் மற்றும் நமதூர் மக்கள் குழுவாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து, CFFC செய்து வந்த பணிகளை எடுத்துக்கூறி, வரும் காலங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தேவையான ஆலோசனைளைப் பெற்றனர்.
கவர்ச்சிகரமான பரிசுகள்:
முன்னதாக பெரியோர் மற்றும் குழந்தைகளுக்காக தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
தேநீர் விருந்துக்குப் பிறகு, ஏராளமான பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. நசீப் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர விமான பயண சீட்டு உபயம் ஜெட் ஏர்வேஸ், சாம்சங் 32" LCD TV, MICRO WAVE OVEN, PRESSURE COOKER, KITCHEN UTENSILS, MIXER GRINDER, ETC.. கிடைத்தன.
நிகழ்சிகள் யாவும் சுமார் இரவு 08.00 மணி அளவில் நிறைவுபெற்றன. இந்நிகழ்ச்சியில் காயலர்களாகிய நாங்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டோம். நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்த ஈமான் சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்து மகிச்சியுடன் இல்லாம் திரும்பினோம்.
இவ்வாறு சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |