உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தால் நடப்பாண்டில் பெறப்பட்ட ஜகாத் நிதியை, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்காணல் மூலம் ஜகாத் பெற தகுதியுடைய ஏழை மாணவ-மாணவியருக்கு வழங்குவதென 09.11.2011 அன்று நடைபெற்ற இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் முடிவு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நேர்காணலை, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஜெஸ்மின் ஹாஜி ஏ.கே.கலீல் ஆகியோர் நேர்காணல் செய்ய அதே கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில், 07.12.2011 புதன்கிழமை மாலை 07.00 மணியளவில், இக்ராஃ அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களை அக்குழுவினர் நேர்காணல் செய்தனர்.
உதவித்தொகைக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 10 பேர் தேர்வுசெய்யப்பட்டு, டிப்ளமோ (தையற்கலை - Tailoring, சமையற்கலை - Catering, Designing) மற்றும் பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஃபில். போன்ற படிப்புகளுக்காக அவர்களுக்கு இக்ராஃ ஜகாத் நிதியிலிருந்து தொன்னூற்றோராயிரத்து எண்ணூறு ரூபாய் (ரூ.91,800) உதவித்தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நேர்காணலில், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உடனிருந்தார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
செய்தித் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டது. (11.12.2011 - 17:14hrs) |