அண்மையில் பெய்த கனமழை காரணமாக, காயல்பட்டினம் 07ஆவது வார்டுக்குட்பட்ட கீழ நெய்னார் தெருவின் தாழ்வான பகுதியில் மழை நீர் பல நாட்களாக தேங்கி, சேறும் - சகதியுமாக பச்சை நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் குளம் போல காணப்பட்டது.
அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் முறையிட்டார். அதனையடுத்து, உடனடியாக அத்தண்ணீரை கடலுக்கு வெட்டிவிடுவதற்கு நகராட்சி அலுவலர்களுக்கு நகர்மன்றத் தலைவர் உத்தரவிட்டார்.
அதனையடுத்து, 07.12.2011 அன்று மாலை 06.00 மணி துவங்கி, மறுநாள் 08.12.2011 (நேற்று) மதியம் வரை மோட்டார் உறிஞ்சி மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, கடலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
செய்தி திருத்தப்பட்டது. (09.12.2011 - 14:21hrs) |