தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலை அண்மையில் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக காயல்பட்டினம் கிளை சார்பில் 13.12.2011 அன்று, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அங்கத்தினர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, அக்கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் வி.பி.ராஜன், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
கூட்ட ஏற்பாடுகளை, நகர திமுக செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தகவல்:
மாஷா அல்லாஹ் டிஜிட்டல்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |