KayalSky.com இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் காயல் வானில் பூமியை சுற்றிவரும் HUBBLE TELESCOPE மற்றும் INTERNATIONAL SPACE STATION ஆகியவற்றை பார்க்க கூடிய நேரம் மற்றும் திசை வெளியிடப்படுகிறது (இவை இரண்டும் தவிர பல செயற்கை கோள்கள் காயல்பட்டணத்தில் தென்படும்). தற்போது டிசம்பர் மாத நேரம், திசை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காயல்பட்டணத்தில் HUBBLE TELESCOPE டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையும் தென்படும். INTERNATIONAL SPACE STATION (ISS) டிசம்பர் மாதம் 7ம் தேதி, டிசம்பர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தென்படும். மேலும் நேரம் மற்றும் தெரியும் திசையினை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கான விளக்கப்படம் KayalSky.com இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.
காயல்பட்டணம் தவிர பிறவூர்களில் வசிப்போர் www.heavens-above.com என்ற இணையதளத்தில் அவர்கள் ஊர்களில் இச்செயற்கை கோள்கள் தென்படும் நேரங்களை அறிந்துகொள்ளலாம்.
தகவல்:
www.kayalsky.com
|