துல்கைதா (1432) மாத அமாவாசை செப்டம்பர் 27 செவ்வாய் அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 11:08 மணி
அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் மாலை 4:38.
அன்று (செப்டம்பர் 27) காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:11 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:59.
சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 1.5 மணி நேரம். அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை
காயல்பட்டணத்தில் காண இயலாது.
பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவின் தென் பகுதியில் - தொலைநோக்கிகள்
உதவிகொண்டும் பிறையை காணலாம்.
செப்டம்பர் 28 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:11 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:51.
சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 25.5 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
அமெரிக்க கண்டங்களின் அனேக பகுதிகளிலும், ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக பகுதிகளிலும், தென் இந்தியாவின்
அனேக பகுதிகள், தென் கிழக்கு
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளிலும் வெறுங்கண்கொண்டும், ஐரோப்பா, ஆப்ரிக்காவின் வட
கோடி, அரேபிய நாடுகள்,
பாகிஸ்தான், வட இந்தியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் - தொலைநோக்கிகளின் உதவிக்கொண்டும் பிறையை
காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு செப்டம்பர் 28 - துல்கைதா 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு செப்டம்பர் 27
(அமாவாசை) அன்று ஷவ்வால்
29 பூர்த்தி ஆகிறது. அன்று பசிபிக் கடல் பகுதியில் பிறையை காண வாய்ப்புள்ளது.
அப்பகுதிகளில் அன்று பிறை காணப்பட்ட தகவல் வந்தால் அவர்களுக்கு செப்டம்பர் 28 அன்று துல்கைதா 1 ஆகும்.
தகவல்
கிடைக்கப்பெறாவிட்டால் - அவர்கள் செப்டம்பர் 28 அன்று ஷவ்வால் 30 யை பூர்த்தி செய்வர். அவர்களுக்கு செப்டம்பர்
29 அன்று துல்கைதா 1
ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு செப்டம்பர் 27 (அமாவாசை)
அன்று ஷவ்வால்
28 பூர்த்தி ஆகிறது. செப்டம்பர் 27 அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண இயலாது.
செப்டம்பர் 28 அன்று ஷவ்வால் 29 யை பூர்த்தி செய்வர். செப்டம்பர் 28 அன்று காயல்பட்டணத்தில் பிறையை
வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
அவ்வாறு பிறை செப்டம்பர் 28 அன்று காணப்பட்டால், செப்டம்பர் 28 அன்று ஷவ்வால் 29 யை பூர்த்தி செய்து,
செப்டம்பர் 29
அன்று (செப்டம்பர் 28 பின்னேரம்) அவர்கள் துல்கைதா மாதத்தை துவக்குவர்.
தகவல்:
www.kayalsky.com
[மூன்று மாத தகவல்கள் (துல்கைதா, துல்ஹஜ், முஹர்ரம்) - வெளியிடப்படாமல் இருந்தது. அவை கால தாமதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தாமதத்திற்கு வருந்துகிறோம்] |