காயல்பட்டினத்தை சார்ந்த டாக்டர் அஷ்ரஃப், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதைப் பாராட்டி, அமீரக காயல் நல மன்றம் சார்பில், அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் செயலாளராகப் பணியாற்றி, தற்போது அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் உறுப்பினராகவும் அங்கம் வகிக்கவுள்ள, நமதூர் காயல்பட்டினத்தைச் சார்ந்த டாக்டர் அஷ்ரஃப் அவர்களை எமது ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றம் மனதார வாழ்த்தி மகிழ்கிறது.
உயிர்காக்கும் உன்னத பணியில் உவகையுடன் சேவையாற்றும் டாக்டர் அஷ்ரஃப் அவர்கள் மென்மேலும் பல உயர்வுகளைப் பெற்றிடவும், அதன்மூலம் நமதூருக்கு புகழ் சேர்க்கவும், அதன் பயன்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் முழுமையாகக் கிடைத்திடவும் எம் மன்றம் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
இவ்வாறு, அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக,
ஹாஜி T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |