இந்திய நாட்டின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று மத தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
இந்த மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், தொடர்முழக்கப் போராட்டங்கள், சமய நல்லிணக்க நிகழ்ச்சிகள், கடையடைப்புகள், கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகள் என இன்றளவும் முஸ்லிம் அமைப்புகளாலும், சமய நல்லிணக்கம் விரும்பும் இதர அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், இன்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் பிரதான வீதியில், ‘பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்றுக் கட்மை‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பரப்புரை நடத்தப்பட்டது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த சரித்திர நிகழ்வுகளைத் தாங்கிய பிரசுரங்கள் இந்நிகழ்வின்போது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
அதுபோல, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்டப் பிரிவின் சார்பில், தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. காயல்பட்டினத்திலிருந்தும் அவ்வமைப்பின் சார்பில் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஃபிழ் இஸ்ஸத் மக்கீ,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |