மக்கா, சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் மக்கா வாழ் காயல் உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் டிசம்பர் 2 , 2011 புனித மக்காவில் வெள்ளிக்கிழமை மாலை செயற்குழு உறுப்பினர் சீனா மொஹ்தூம் முஹம்மத் (CNash) அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு KWA-ஜித்தா ஆலோசகர் பொறியாளர் சகோதரர் பஷீர் அஹ்மத் அவர்கள் தலைமை தாங்கினார். KWA செயலாளர் சகோதரர் செய்யத் இபுராஹீம், செயற்குழு உறுப்பினர் பொறியாளர் சகோதரர் நசீர் அஹ்மத், சகோதரர் முஹம்மத் ஜக்கரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சகோதரர் சீனா மொஹ்தூம் முஹம்மத் (CNash) வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் வருகை தந்திருந்த உறுப்பினர்களின் சுய அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ச்சியாக செயலாளர் சகோதரர் செய்யத் இபுராஹீம் உறுப்பினர்களுக்கு அறிமுக உரையாற்றினார். இந்த புனிததலத்தில் பணிபுரியும் அரிய வாய்ப்பினை அனைவருக்கும் நல்கி இருக்கும் வல்ல இறையோனுக்கு நன்றி செலுத்தி தன் உரையை துவங்கி, ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை செய்துள்ள அறப்பணிகள் குறித்தும், மருத்துவம், கல்வி மற்றும் சிறுதொழில் வளர்ச்சிக்கு என்று மன்றம் இதுவரை செய்துள்ள உதவிகள் குறித்தும் இன்னும் செய்ய இருக்கின்ற பணிகள் குறித்தும் அழகிய முறையில் எடுத்துரைத்தார். மேலும் இன்னும் பல நல்வழிகளில் சேவைகள் செய்யும் பொருட்டு அதன் உறுபினர்களை இணைக்கும் முகமாக மக்காவிற்கு புதிதாக வந்திர்க்கும் புதிய உறுபினர்களை இந்த பணியில் ஈடுபடுத்தி கொள்ளவும், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் வருகை தந்த உறுப்பினர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், கருத்துபரிமாற்றங்களும் நடைபெற்றது. அதன்படி மக்காவில் பணிபுரியும் காயலர்களின் எண்ணிக்கை 37 என கணக்கிடப்பட்டு, கூட்டதிற்கு வருகை தந்த 21 உறுப்பினர்களின் புதிதாக வந்தவர்களின் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றது. மேலும் பனி நிமிர்த்தமாக வருகை தர முடியாத அங்கத்தினர்களையும் உறுபினர்களாக இணைக்கும் முயற்சியில் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களை தொடர்பு கொள்ளும் பணிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஹஜ் கடமை, மற்றும் உம்ரா நிறைவேற்ற புனித மக்கா வருகை தரும் தமது தாயக, மற்றும் வெளிநாட்டு வாழ் காயலர்களுக்கு சேவைகள் மற்றும் உதவிகள் செய்யும் முகமாக MAKKAH KAYALITE VOLUNTEERS COMMITTEE அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு என்னென்ன சேவைகள் செய்ய முடியும் என்பன விவாதிக்கப்பட்டு இறுதியாக இது குறித்த தீர்மானம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற KWA -ஜித்தாஹ் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக அமைப்பினர்களுடன் கலந்தாலோசித்து நிறைவேற்ற முடிவு செய்யபட்டது. இது போன்று மற்ற நற்பணிகள் குறித்தும் இனி வரும் கூட்டங்களில் கலந்தாலோசித்து முடிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் முதல் முறையாக ஓரிடத்தில் சந்தித்து உரையாடி நல்ல பல கருத்துகளை பரிமாரிகொண்டதர்கான மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொண்டனர்.
இறுதியாக சகோதரர் YM முஹம்மத் சாலிஹ் அவர்கள் நன்றி உரை நிகழ்த்த, கப்பாரா உடன் கூட்டம் நிறைவுபெற்றது.
தகவல்:
நூர் முஹம்மத் ஜக்கரியா,
பொதுக்குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம், ஜித்தா.
|