சஊதி அரபிய்யா, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளியோரின் கல்வி, மருத்துவம், சிறுதொழில் தேவைகளுக்காக சுமார் 1 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக, அதன் செயற்குழுக் கூட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காவலன் அல்லலாஹ்வின் பெருங்கருணையினால் எமது காயல் நற்பணி மன்ற 27ஆவது செயற்குழுக் கூட்டம் கடந்த 25.11.2011 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் எம் சங்க துணை தலைவர் ஹாஜி மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றஆலோசனை குழு உறுப்பினர் பிரபு ஷேய்க்னா ஆலிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் . அல்ஹாபிள் P .S .J .ஜைனுல் ஆபிதீன் அவர்களர்ல் இறைமறை துணை கொண்டு துவங்கியது.
செயற்குழு மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் நமதூர் நகரின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விசயங்கள் அலசி ஆலோசிக்கபட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அடுத்த பொதுக்குழு கூட்டம்:
எதிர் வரும் 2012 பிப்ரவரி 10 வெள்ளிகிழமை மாலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிவுடன் பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிதி உதவிகள் செய்யப்பட்டது . சீரான நீடூழி கால நன்மை தரும் இவ்வுயர் பணிக்கு தாராளமாக உதவிய அன்பு உள்ளங்களுக்கு இம்மன்றம் மனபூர்வமான நன்றியை தெரிவிக்கிறது.
(அ) இரு கிட்னி இலும் கல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த சகோதரி ஒருவருக்கு ஆப்பரேசன் வகைக்கு ரூபாய் 8 ,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஆ) மூதாட்டி ஒருவரின் நீரழிவு நோயிக்கு தொடர் மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 வழங்க தீர்மானிக்கபட்டது.
(இ) சகோதரர் ஒருவரின் மூளை ஆபரேசன் வகைக்கு அவசர நிமித்தம் ரூபாய் 25,000 வழங்கியதை செயற்குழு அங்கீகரிக்கிறது.
(ஈ) வாடகை சாமான்கள் நிறுவனம் நடத்துவதற்கு சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது .
(உ ) தன் வியாபாரத்தை விரிவு படுத்த சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கபட்டது
(ஊ ) பிஸ்கட் வகைகள் தயார் செய்து விற்பனை செய்ய சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5000 வழங்க தீர்மானிக்கபட்டது.
(எ) novel பவர் தையல் மெசின் வாங்க சகோதரி ஒருவருக்கு ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கபட்டது.
(ஏ) தையல் மெசின் வாங்க மற்றொரு சகோதரிக்கு ரூபாய் 8,000 வழங்க தீர்மானிக்கபட்டது.
(ஐ)இக்ரா கல்வி சங்க பணிக்கு அத்திய அவசியத்தை முன்னிட்டு மடிக்கணினி வாங்கி கொடுக்க தீர்மானிக்கபட்டது.
ஒ ) மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடனுதவியாக ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கபட்டது .
தீர்மானம் 3 - அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த வழிகாட்டுமாறு வேண்டுகோள்:
நமதூர் வறிய மக்களின் நோய் நிவாரணம் வேண்டியும் அதற்கு அதிகமான நிவாரண உதவி வேண்டியும் பல விண்ணபங்கள் அதிகமாக வருகிறது.
அரசு மருத்துவமனைகள் குறிப்பாக தூத்துக்குடி மெடிகல் கல்லூரி மருத்துவமனை , திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை விட பல கஷ்டமான ஆபரேசன்களை மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக செய்கிறார்கள் என்று செய்திகள் மூலம் அறிகிறோம்.
மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக நல மன்றங்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் அம்மக்களுக்கு வழிகாட்டிடுமாறு எம்மன்ற செயற்குழு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்றத் தலைவரின் நன்றியுரைக்குப் பின், பிரபு ஷேக்னா ஆலிம் அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதுற நிறைவுபெற்றது அல்ஹம்து லில்லாஹ்!
கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு ரியாத் காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஏ.எச்.முஹம்மத் நூஹ்,
செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா. |