“கல்வியை புரிந்து படிப்பது எப்படி?” என்ற தலைப்பில், மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி 27.11.2011 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 08.00 மணிக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணியின் புகாரீ நினைவு நூலக அரங்கில், அதன் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் துவங்கிய கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில், லண்டனில் M.Pharm. முடித்த ஜே.ஏ.அப்துல் ஹலீம், மடிக்கணனியில் Power Point Presentation உதவியுடன் மாணவர்களுக்கு வழிகாட்டும் கருத்துக்களை வழங்கினார்.
நிறைவாக, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் யான்பு பிரதிநிதி ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க, இளைஞர் ஐக்கிய முன்னணியின் அலுவலக பொறுப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீயின் துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நீண்ட காலத்திற்குப் பிறகு இங்கு நடத்தப்படும் இந்த கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.எஸ்.ஹஸன் ஷாக்கிர், எஸ்.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் இம்ரான், எஸ்.ஐ.ஷஃபீக்குர்ரஹ்மான், டி.ஏ.நூஹ் நஜீயுல்லாஹ், எம்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல், எம்.டி.முஹம்மத் இப்றாஹீம் ஆகிய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வருங்காலங்களில் இந்நிகழ்ச்சியை இன்னும் கூடுதலான மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, விரிவாக நடத்துமாறு அப்போது மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தகவல்:
செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |