தூத்துக்குடி மாவட்டம் முழுவதையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நிர்வகிக்கும் கடமையில் உள்ளது தூத்துக்குடி - கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம். அங்குள்ள ‘சுகமான - சுகாதாரமான‘ கழிப்பறையின் காட்சிகள்:-
கண்ணைக் கட்டிக்கொண்டு கடந்து சென்றாலும் க......ஸ் இருக்குமிடத்தை நுனிநாவால் சொல்லிவிடலாம் எனும் அளவில், அவ்விடம் சென்றபோதே அதன் வாசம் நம்மை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஹாஜி N.S.E.மஹ்மூது,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.
1. இந்த சுகாதாரம் பேணவா இவ்வளவு பெரிய படிப்பு? posted byMauroof (Dubai)[01 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13982
ஆஹா! என்னே ஒரு சுத்தம்!! என்னே ஒரு சுகாதாரம்!! மாவட்ட ஆட்சியரகத்திலேயே இந்த நிலை எனில் மாவட்டத்தின் தலைநகர் மற்றும் பிற பகுதிகளிலும் காணப்படும் சுகாதார சீர்கேட்டை யாரிடம் எங்கு போய் சொல்வது? சுகாதாரம் பேணவில்லை என்றால் என்ன பெரிய படிப்பு படிச்சு என்ன செய்ய?
3. Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச... posted byK S muhamed shuaib (Kayalpatinam)[01 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13988
இங்கு மட்டுமல்ல நண்பர்களே.. பொதுவாக தமிழ்நாட்டில் இயங்கும் அரசு அலுவலகங்களின் நிலைமையே ஏறத்தாழ இந்தமாதிரித்தான் இருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் போய் பாருங்கள். அங்கும் மூக்கை பிடித்துக்கொண்டுதான் நீங்கள் அங்குள்ள டாய்லாட்டில் நுழைய முடியும்.
ஒரு மாவட்ட ஆட்சிதலைவர் அமர்ந்து நிர்வாகம் செய்கிற ஒரு அலுவலகத்தை அந்த மாவட்ட ஆட்சிதலைவரேனும் அன்றாடம் சென்று கண்காணிக்க மாட்டாரா? என்ன கொடுமை இது?
துப்புரவு பணியாளர் எவரும் அங்கில்லையா? அரசு அலுவலக கட்டிடங்கள் சரியாக பராமரிப்பின்மை சுகாதாரம் பேணாமை இவ்வளவு ஏன் -அரசு கட்டிடங்களே தரத்தோடு கட்டப்படுவதில்லை. அவைகளை கட்டி ஓராண்டு முடிவதர்க்குள்ளாகவே பெரும்பாலான கட்டிடங்கள் உபயோகிக்க முடியாமல் போய்விடும்.
மிக சமீபத்தில் கோவையில் கட்டிமுடிக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியகழக வீடுகள்கட்ட படும் போதே பூமிக்குள் இறங்கின. எல்லாமே காண்ட்ராக்டர்களின் போலி வேலைகள். ஒரு சட்டி சிமெண்ட்டுக்குஆறு சட்டி மண் கலந்தால் எங்கிருந்து கட்டிடம் உருப்படும்?
இந்த செய்தியை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு போனால்தான் நடவடிக்கை எடுக்க படும், இல்லை என்றால் இப்படிதான் இருக்கும், இந்த செய்தியை அப்படியா போஸ்ட்ல அனுப்புங்க,
5. சுத்தம் சுகம் தரும் posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[01 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13993
படித்த பட்டதாரிகள், உயரதிகாரிகள் உபயோகபடுத்தும் இடமே இப்படி என்றால் பாமரர்கள் பயன் படுத்தும் இடம் ........ஐயோ நினைக்கவே பயமாக உள்ளது.
இதனை தடுக்க ஆரம்ப கல்வி முதல் சுத்தத்தை பாடமாக்கி கற்பிப்பதுடன் சிறுநீர் கழித்தபின் உறுப்புக்கள் மற்றும் இடத்தை நாம் செய்வது போல் கட்டாயம் தண்ணீரால் சுத்தம் செய்யவும் கற்பிக்கவேண்டும் .
இதனால் இடம் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் பரவுவதும் தடைபடும்.
6. Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச... posted byMOHAMMED LEBBAI (dxb)[01 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13994
kayalpatnam.com ஒப்பன் பண்ணியதும் துர்நாற்றம் அடிக்குதே என்று பார்த்தால்???????? இதுதான் மேட்டரா,,,,,,,,,,,
9. மணக்குமா நமது தேசம்? posted byshahul hameed sak (malaysia)[01 December 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 14003
மாவட்ட ஆட்ச்சியர் வீட்டு கழிப்பறை இப்படி இருக்குமா?
பொது இடம்தானே எப்படி இருந்தால் என்ன!?
எக்கேடு கெட்டு போனால் என்ன!?
இதுதானே நமது இந்தியத்திருநாட்டு மக்களின் மனநிலை,
நடைமுறை, இதில் மாவட்டஆட்ச்சியர் மட்டும் வதிவிலக்கா
என்ன!?
10. Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச... posted byVilack SMA (Yi Li , Hetang .)[01 December 2011] IP: 66.*.*.* United States | Comment Reference Number: 14006
இதை படம் பிடித்த NSE மாமா , கலெக்டர் எந்த மாதிரியான toilet பயன்படுத்துகிறார் என்பதையும் படம் பிடித்திருந்தால் , நமக்கு வித்தியாசம் தெரிந்திருக்கும் . ஒருவேளை , அவரும் " இங்கேதான் " வருகிறார் என்றால் , நாம்தான் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும் .
12. Re:‘நாரோடு,பூவும் நாறுது! posted byOMER ANAS (DOHA QATAR.)[02 December 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14011
மாவட்ட ஆட்சியரகமே இப்படி நாறுது! இதுல ஊருக்கு சுத்த உபதேசம்! இந்தியாவில் காலடி எடுத்து வெளியே வந்ததுமே நம் நாட்டு மண்வாசனையை நாம் உணரலாம். அப்படி பெருமைபடும்படி இருக்கும் நம் நாடு. எப்படி மாமா தைரியமா உள்ள போய் படம் எடுத்தீங்கோ? கேமராவை CONTACT SPRAY கொண்டு கழுவுங்கோ! கப்பு தாங்களே!
பூவோடு நாறும் மணக்கும்! ஆனா இங்கே நாரோடு பூவும் நாறுகிறது! வாழ்க நாற்ற ஆட்சியரகம்>>>> உங்கள் (அ)சுத்தமான பொன்மொழிகளை தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்தால் நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் அதை படித்து பயன் பெருவார்கள்! கழுவச் சொன்னா பத்தாது, முதல்ல செய்து ஹுசைன் காக்காவிடம் கூட்டி போய் வெட்டச் சொல்லுங்கோ! அதுவே முதல்ல சுகாதாரக் கேடு!
13. Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச... posted bySalai Nawas (singapore)[02 December 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14012
NSE மாமா, கலெக்டர் ஆபீஸ்க்கு மீட்டிங் போனோமா வந்தமான்னு இல்லாம, கண்ட கண்ட இடங்களை போட்டோ எடுத்து அனுப்புரீன்களே, அடுத்த மீடிங்க்கு கலெக்டர் ஆபீஸ் போன உங்ககிட்டே கேமரா இருக்கான்னு கேட்டுட்டு தான் உள்ளே அனுப்புவாங்க.
14. Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச... posted byfathima (kayalpatnam)[02 December 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 14014
அஸ்ஸலாமு அழைக்கும்
உம்மாடி உம்மாடி இப்படியோரு சுத்தம் சுகாதாரம் நான் இதுவரை எங்கயும் பார்த்தது இல்லை மாவட்ட ஆட்சி அரங்கமே எப்படி என்றால்.......... மத்ததை நான் சொல்லவேண்டாம்.
பிரசவத்துக்காக வலி தெரியாமல் இருக்க குளோரோ பாம் கொடுப்பாங்க இந்த இடத்துக்கு பிரசவிக்கும் பெண்ணை ஒரு முறை காட்டி சென்றால் போதும் குலோரோபாம்க்கு செலவு மிச்சம்.......
இதை பார்த்தாவது திருந்துகப்ப.....
இன்னாளில்லாஹி ஸாலிஹ் காக்காகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கப்பா...ஊர் நாற்றம் லா வெட்ட வெளிச்சம் வருது,...
15. Re:‘மய(ண)க்கும்‘ மாவட்ட ஆட்ச... posted byM.சுல்தான் (சூடான்)[02 December 2011] IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 14038
பார்க்கவே சகிக்கல...... இதுல வேற NO SMOKING அறிவிப்பு பலகை... யாராவது இந்த இடத்துல வந்து Smoke பன்னுவார்களா... அந்த அறிவுப்பு பலகைக்கு பதிலா சுத்தம் சுகம் தரும் எனற அறிவுப்பு பலகை வைக்கலாம்....
லொள்ளு :
வெத்தல வெத்தல வெத்தல.... கொளுந்து வெத்தல.... இந்த போட்டவே பாக்கவே எனக்கு புடிக்கல..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross