காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவு முதல் காலை 09.40 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
நேற்றிரவு 10.00 மணியளவில் சிறு சாரலாகத் துவங்கிய இம்மழை நள்ளிரவில் கனமழையானது. இரவு முழுக்க பெய்த கனமழை, இன்று காலை 09.40 மணிக்கு முடிவுற்றது.
நகரில் இருண்ட வானிலையே நிலவி வருகிறது. சூரிய ஒளியில்லை.
நகரில், வழமையான தரை மட்டத்திற்கும் உயர்வாக போடப்பட்டு வரும் சிமெண்ட் சாலை காரணமாக, கனமழையின் நீர்த்தேக்கம் சாலையோரங்களையும், சந்து பொந்துக்களையும் ஆட்கொண்டுள்ளது.
இன்று நள்ளிரவில் அளவுக்கதிகமாக மழை பெய்துள்ளதால், நீர்த்தேக்கம் உயர்ந்து வீடுகளுக்குள் நீர் செல்லும் காட்சி:-
இவ்வாறு நீர் செல்வதால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் ஏற்கனவே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் காரணமாக மழை நீர் உட்செல்வது தடுக்கப்பட்டுள்ள காட்சி:-
|