உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு, இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த முகமதியர்களில் உலமாக்கள் நலவாரியத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு தமிழக அரசால் இலவச மிதிவண்டிகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
இலவச கண் கண்ணாடிக்கான உதவித்தொகை,
உருது மொழியை கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்,
மத்ரஸா கல்வி முறையினை நவீனப்படுத்துதல், மவ்லானா ஆஸாத் கல்வி அமைப்பின் மூலம் கல்விக் கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,
சிறுபான்மையினர் வாழும் குடிசைப் பகுதிகளின் நிலையை மேம்படுத்துதல்,
கல்வி கடன், தனிநபர் கடன், குழுக்கடன் போன்ற பல்வேறு வகையான கடன்களை வழங்குதல்
என இந்த அரசு சிறுபான்மையின மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சுரேஷ் மற்றும் உலமாக்கள் நலவாரிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். |