சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice Jet நிறுவனத்தின் தினசரி விமான சேவை (SG 3291/ SG 3292) இன்று (டிசம்பர் 7) முதல் செயல்பட துவங்கும். தினமும் காலை 9:40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம், 11:05 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மீண்டும் 11:25 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மதியம் 12:50 மணிக்கு சென்னை சென்றடையும்.
டிசம்பர் இறுதியில் நகரில் நடைபெறவுள்ள திருமணங்களில் கலந்துக்கொள்ள காயலர் பலர் இவ்விமானத்தில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சேவை டிசம்பர் 1 அன்று துவக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்த நாளில் சேவை துவங்காததால் - முன்பதிவு செய்திருந்த காயலர் பலர் கவலையில் இருந்தனர்.
Spice Jet நிறுவனம் இம்மார்க்கத்தில் Bombardier நிறுவனத்தின் Q400 ரக விமானங்களை பயன்படுத்தவுள்ளது. இவ்விமானத்தில் 78 பயணியர் வரை பயணம் மேற்கொள்ள முடியும்.
இது இம்மார்க்கத்தில் இயக்கப்படும் இரண்டாவது விமான சேவையாகும். ஏப்ரல் 2006 முதல் - முதலில் Air Deccan நிறுவனமும், பின்னர் King Fisher நிறுவனமும் தினசரி விமான சேவையை இம்மார்க்கத்தில் இயக்கி வருகின்றன. தினமும் (புதன் கிழமையை தவிர்த்து) மதியம் 2:20 மணிக்கு புறப்படும் King Fisher விமானம் மாலை 3:50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைகிறது. தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலை 4:15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 5:50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
புதன் கிழமைகளில் மதியம் 2:10 மணிக்கு புறப்படும் King Fisher விமானம் மாலை 3:40 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைகிறது. தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலை 4:05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 5:40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
2. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byparthipan (tuticorin)[07 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14227
விமான நேரத்தில் மாற்றம் உள்ளது. சரியான டைம் இதுவாகும் .காலை 9.55க்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம், 11.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மீண்டும் 11.40 க்கு புறப்படும் இந்த விமானம் மதியம் 01.05க்கு சென்னை சென்றடையும்.
இரண்டாவது விமான சேவை தினமும் மதியம் 2.35 மணிக்கு புறப்படும் King Fisher விமானம் மாலை 4.05க்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறது. தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலை 4.30க்கு புறப்படும் இந்த விமானம் மாலை 06.05க்கு சென்னை சென்றடைகிறது.
Administrator:
விமான சேவை நேரங்கள் - அந்நிறுவனங்களின் இணையதளத் தகவல்கள் படி வெளியிடப்பட்டுள்ளன.
3. மலர்ந்த நினைவுகள் posted bySalai Sheikh Saleem (Dubai)[07 December 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14229
தம்பி ஜியா, உன் பதிவை படித்துக்கொண்டிருக்கும் போதே என் மனதிலும் அதே நினைவுகள் " ஏரோபிளேன் பறக்கிறதாம்" என்று எங்களின் ரடாறிற்கு தகவல் கிடைத்ததும் ஓடோடி மாடிக்கு சென்று ஒரு புள்ளி அளவில் தெரியும் விமானத்தை பார்த்ததை பள்ளிக்கூடத்தில் போய் சொல்லி பெருமைப்பட்டது - சவூதிக்கு முதலில் பயணிக்கும்போது முதல் விமானப்பயணம் - காலமெல்லாம் ஊரிலேயே பட்டறை போட்டுவிட்டு, நாடு, ஊர், வீட்டில் எல்லோரையும் பிரிந்து ஒரு அந்நிய நாட்டில் முதல் இரவில் கண்ணீர் தழும்ப சாப்பிட்டது - ஜாபகம் வருதே ஜாபகம் வருதே.....
தம்பி, அந்த பந்தல்குடி விஷயம் இருக்கே, பார்த்தவுடன் படீர் என்று சிரித்து விட்டேன். என்ன ஒரு TIMING!!! உன்னுடைய நகைச்சுவை உணர்விற்கு ஒரு சல்யுட்
4. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byMS MOHAMMED LEBBAI (dxb)[07 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14230
நல்லதொரு செய்திதான் ,,,,,,,, ஏற்கனவே விமான சேவை சென்னை to தூத்துக்குடி இருந்தாலும்,,, சில நாட்களுக்கு முன்பாக எனது நண்பனின் இளைய மகனுடைய மறைவுக்கு அவருடைய மூத்த மகன் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் தம்பியுடைய முகத்தை கூட பார்க்கமுடியாமல் போனது,,,
எனவே விமான சேவைகள் கூடும்போது அவசர தேவைகளுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும்,,, ticket எளிதாக கிடைக்க வாய்ப்புண்டு.
5. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byFuad (Singapore)[07 December 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 14231
அஸ்ஸலாமு அலைக்கும்.
சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் spice jet விமானம் விடப்பட்டிருக்கும் நல்ல செய்தி. தம்பி ஜியாவுதீன் தனது கல்லூரி நாட்களை நினைத்து விட்டார்போலும். பந்தல்குடி ஹோட்டல் என்ன விருதுநகர் பஸ் ஸ்டான்டிற்குள்ளும் விமானத்தை ஓட்டிச்சென்று இட்லி, தோசை கூட சாப்பிட்டுவிட்டு வரலாம், சொந்த விமாணன் இருந்தால்.
8. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byT.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852a)[07 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14242
30 -35 வருடங்களுக்கு முன் ஒரு காலத்தில் இந்தியன் ஏற லைனில் எல்லாம் அடிக்கடி பிரயாணம் பண்ணும்போது சஜசன் லட்டரில் தூத்துகுடிக்கு பிளைட் போடுங்கோ என்று ஒரு இருபது தடவையாவது எழுதி போட்டிருப்பேன் .காரணம் காட்டுவது தூத்துக்குடி ஒரு ஸீ போர்ட், திருச்செநதூர் ஒரு இஸ்ப்ரிட்சுவல் பிளேஸ் என்றெல்லாம் எழுதுவதுண்டு. என்னமோ அல்லாஹ் இதன் நாட்டத்தை இப்போ நிறைவேற்றி விட்டான் என்று எனக்கு மனதில் ஒரு சந்தோசம்,.அப்போ நமது மக்கள் கேலி பண்ணினாங்கோ . இன்ஷா அல்லாஹ் திருச்செந்தூருக்கு ஒரு ஹெலி பேட் ஆவது வராமலா போவுது..! நீங்களும்தான் துஆ செய்யுங்களேன்.
9. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byABUTHAHIR.MIK (HOLY MAKKAH)[07 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14245
சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice ஜெட் என்ற செய்தியை படிக்க துவங்கும் போது மனது பகீர் என்று ஆனது. இதுவும் கப்பல் கம்பெனி மாதிரி எதுவோ சொல்ல போராங்கோடு. முழுசா படிச்ச பிறகுதான் மனத்திருப்தி.
துவங்கும் சேவை துவங்கட்டும் !
துவங்கிய சேவை தொடரட்டும் !!
தொடரும் சேவை நில்லாமல் தொடரட்டும் !!!
10. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byAdministrator (Chennai)[07 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14247
டிக்கெட் விலை நாளுக்கு நாள், சீசனுக்கு தகுந்தவாறு மாறுபடும். இம்மாத பயணத்திற்கு 1500 ரூபாய்க்கு பலர் டிக்கெட் வாங்கியுள்ளனர். சராசரியாக - பல நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தால் - டிக்கெட் விலை சுமார் 2500 ரூபாய் முதல் துவங்கும்.
11. சென்னை - தூத்துக்குடி மார... posted byhasbullah mackie (dubai)[07 December 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14249
இதுவும் கப்பல் கதையும் ஒன்றாகி விடுமோ? கவனமாக இருங்கள் .....கப்பலுக்கு போன மச்சான் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது........
flight time - வித்தியாசமா இருக்கு .........ADMIN : GIVE CORRECT TIMINGS
Administrator: விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய தகவல் அடிப்படையில் நேரங்கள் தரப்பட்டுள்ளது
13. ஏமாற்றம் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[07 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14269
விமான சேவை அதிகமாக , அதிகமாக அதை உபயோகிப்போரும் அதிகமாகிறார்கள்.. இது நான் அனுபவித்த உண்மை..
முன்பு ஒரு விமானம் மட்டும் தூத்துக்குடி சென்ற போது, டிக்கெட் இல்லை என்ற பேச்சே இல்லாமல், பூகிங் கிடைத்தது,,, spicejet தனது சேவையை அறிவித்த , இரண்டு வாரங்களில், டிசம்பர் இருபத்தி ஐந்துக்கு டிக்கெட் பார்த்தால், spicejet டிக்கெட் இல்லை, kingfisher ஒன்லி இரண்டு டிக்கெட் ... எனக்கு தேவை மூன்று .. அதனால் ஏமாற்றம்.
14. Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byT,M,RAHMATHHULLAH10-12-2011 (KAYALPATNAM 04639 280852)[10 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14329
சென்னை-தூடி ஏற ரூட்லே பந்தல்குடியிலே டீகுடிக்க நிறுத்த ரன்வே இல்ல.. ஒரு வேளை ஹெலிகொப்டரில் போங்க நிறுத்தினாலும் நிறுத்துவாங்க .அனால் அங்கும் ஹெலி பேட் வேணும். இருந்தாலும் பைலட் கிருபையிருந்தா ஒரு நுறு அடி மேலே ஸ்டேன்ட் பையா நிப்பாட்டுவாங்க. இன்ஷா அல்லாஹ மேலே இருந்து வாளி கட்டி கயிறு இறக்கி ட்டீ கேட்டு விடணும். ஒரு ட்டீ ஐயா ஆயிரம் டா.முடியும். வேணுமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross