சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice Jet நிறுவனத்தின் தினசரி விமான சேவை (SG 3291/ SG 3292) நேற்று (டிசம்பர் 7) துவங்கியது. சென்னையில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் - தூத்துக்குடி (வாகைக்குளம்) விமான நிலையத்தை காலை 11:05 மணி அளவில் அடைந்தது.
முதல் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை Spice Jet நிர்வாகிகள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி கிளை தலைவர் ஜோ வில்லவராயர், அகில இந்திய வர்த்தக தொழில் சங்க பொதுச் செயலாளர் ராஜாசங்கரலிங்கம், இந்திய வர்த்தக தொழில் சங்க செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் Spice Jet தலைமை செயல் அதிகாரி நடராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு காலை 11.40 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த சேவையை தொழிலதிபர்கள் ஜோ.வில்லவராயர், ராஜா சங்கரலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முன்னதாக காலை 11.00 மணிக்கு விமானநிலையத்தில் உள்ள Spice Jet அலுவலகத்தில் தொடக்க விழா நடந்தது. இதில் பிஎஸ்எஸ்கே ராஜாசங்கரலிங்கம், விவிடிஆர் கோடீஸ்வரன், விமானநிலைய அதிகாரி பால் பிலிப், விமான நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் பொன்மணி மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றினர். தூத்துக்குடியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் முதல் பயணம் மேற்கொண்ட அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அனுப்பிவைத்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்பைஸ்ஜெட் தலைமை செயல் அதிகாரி நடராஜன், பொது மேலாளர் (உள்கட்டமைப்பு) அங்கேஷ், அகில இந்திய வர்த்தக சங்க நிர்வாகிகள் ஜோ. பிரகாஷ், ஆனந்த் கணேஷ், ராஜா ஸ்டாலின், சூரியன் எப்.எம் பொது மேலாளர் சங்கரசுப்பு, தினகரன் பொது மேலாளர்கள் மதுரை முருகன், நெல்லை சேலின்ஸ், Spice Jet சீனியர் மேலாளர் ரஞ்சீவ், தூத்துக்குடி நிலைய பொறுப்பாளர் விஜயகுமார், நெல்லை தொழிலதிபர் சரவணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புகைப்பட உதவி:
பெலிக்ஸ் சீனிவாசகன்
|