எதிர்வரும் சனிக்கிழமை (டிசம்பர் 10) - முழு சந்திரக் கிரகணம் (TOTAL LUNAR ECLIPSE) ஏற்படவுள்ளது. இக்கிரகணத்தை முழுவதுமாக காயல்பட்டினத்தில் காணலாம். இவ்வாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இதுவாகும்.
2011 இல் மொத்தம் 6 கிரகணங்கள் ஏற்படுகின்றன. (4 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்). அதில் 4 சூரிய கிரகணங்களும் காயல்பட்டினத்தில் தென்படவில்லை. 2 சந்திர கிரகணங்களும் தென்படுகிறது.
டிசம்பர் 10 சந்திரகிரகணம் தென்படும் நேரங்கள்
சந்திர கிரகணம் (Penumbral - மெல்லிய பகுதி) துவங்கும் நேரம்
மாலை 5:03
காயல்பட்டினத்தில் சந்திரன் உதயம்
மாலை 5:51
பகுதி சந்திர கிரகணம் (Partial Phase) துவங்கும் நேரம்
மாலை 6:15
முழு சந்திர கிரகணம் (Total Phase) துவங்கும் நேரம்
இரவு 7:36
கிரகண உச்சக்கட்ட நேரம் (Total Eclipse Maximum)
இரவு 8:01
முழு சந்திர கிரகணம் (Total Phase) முடியும் நேரம்
இரவு 8:27
பகுதி சந்திர கிரகணம் (Partial Phase) முடியும் நேரம்
இரவு 9:47
சந்திர கிரகணம் (Penumbral - மெல்லிய பகுதி) முடியும் நேரம்
இரவு 11:00
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், சீனா மற்றும் இலங்கையில் - இக்கிரகணத்தை முழுமையாக காணலாம்.
துபையில் சந்திரன் உதிக்கும்போது (மாலை 5:25) - பகுதி சந்திர கிரகணம் துவங்கி இருக்கும்.
தோஹாவில் சந்திரன் உதிக்கும்போது (மாலை 4:40) - பகுதி சந்திர கிரகணம் துவங்கி இருக்கும்.
தமாமில் சந்திரன் உதிக்கும்போது (மாலை 4:43) - பகுதி சந்திர கிரகணம் துவங்கி இருக்கும்.
ரியாத்தில் சந்திரன் உதிக்கும்போது (மாலை 5:01) - முழு சந்திர கிரகணம் துவங்க ஐந்து நிமிடம் இருக்கும்.
ஜித்தாவில் சந்திரன் உதிக்கும்போது (மாலை 5:39) - சந்திர கிரகணம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும்.
மக்காவில் சந்திரன் உதிக்கும்போது (மாலை 5:36) - சந்திர கிரகணம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும்.
காயல்பட்டினத்தில் அடுத்த முழு சந்திரக் கிரகணம் - ஜனவரி 31, 2018 அன்று தான் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
www.kayalsky.com |