இன்று நள்ளிரவு 03.30 மணியளவில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெய்துள்ள இம்மழையால், வற்றிய நீர்த்தேக்கங்கள் மீண்டும் குளமாக உருவெடுத்துள்ளன.
2. Re:தொடரும் கனமழை!... posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[10 December 2011] IP: 219.*.*.* China | Comment Reference Number: 14338
கன மழை தொடர்வது நல்லதுதானே! நீர் வரத்து அதிகமிருக்கும்.. மனிதர்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். 12 மாதத்தில் வெறும் 1 மாதமே மழை பொழிகிறது.மழை என்பது இறைவனின் மிகப்பெரிய கிருபை.
தண்ணீர் தேங்குவது பற்றி கவலைபடாமல் , தண்ணீர் வடிகாலுக்கு நிரந்தர தீர்வுக்கு வழி தேட முனைவோமாக
முக்கியமாக மழை நீர் சேகரிப்பிற்கு நகராட்சி வழி வகுக்க வேண்டும்.குறுகிய கால திட்டங்களைவிட நீண்டகால பயனுள்ள திட்டங்களாக இருக்க வேண்டும்..
4. ஏழு முட்டாள் நண்பர்களின் பிக்னிக்....! posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[11 December 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14363
ஒரு ஊரில் ஏழு நண்பர்கள் பிக்னிக் புறப்பட்டனர். செல்லும் வழியில் மற்றொரு ஊரை கடக்கும் நேரத்தில் இரவு நேரம் ஆனது... ஒரு ஆற்றை கடந்தால்தான் அந்த ஊரை அடைய முடியும். இப்படி இருக்க நண்பர்களில் சிலர் இக்கரையில் இருந்துவிட்டு காலையில் கடக்கலாம் என்றனர். மற்றும் சிலரோ இல்லை, இல்லை இப்போதே... கடக்கணும் இரவாக இருப்பதால் ஆறு தூங்கும் நாமும் பத்திரமாக கடந்துவிடலாம் என்றனர்.
இதை சரிகண்ட நண்பர்கள் எல்லாவரும் ஓ... போட்டனர்.
அதன் அடிப்படையில் ஆறு தூங்குவதை எப்படி அறிவது என்ற ஆலோசனையில் ஒரு முடிவை எடுத்தனர். ஒரு ஓலையில் நெருப்பை கொடுத்து ஆற்றில் முக்கி பார்த்து சப்த்தம் வந்தால் ஆறு தூங்கவில்லை.... சப்த்தம் வரவில்லை என்றால் தூங்குகிறது என்றும் முடிவெடுத்து ஏழுபேரும் முயற்ச்சியில் இறங்கினர்.
தீ கொடுத்து பார்த்ததில் சப்த்தம் வந்தது... பயணத்தை நிறுத்தில் மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து பார்க்கலாம் என்று சொல்லி பார்ப்பதுக்கு ஒருவரை பொறுப்பாளராக வைத்து தூங்கினர்... அவரும் தூக்க கண்ணில் ஓலையில் தீயை கொடுக்காமல் பழைய அந்த ஓலையை ஒருமணிநேரம் கழித்து ஆற்றில் முக்கி பார்த்ததில் சப்த்தம் வராததால் சந்தோசத்தில் நண்பர்களிடம் சொல்லி..... ஆற்றை கடந்தனர்.
அக்கறையை அடைந்த அனைவரும் பொழுது விடிந்ததும்..... சந்தோசத்தில் ஒருவரை ஒருவர் உள்ளனரா..... என்று பரிசோதனை செய்ய ஒருவரை ஒருவர் விட்டுவிட்டு எண்ணும் போது.... 6 நபர்களே..... கணக்கில் வருவதால்..... ஒருவரை காணவில்லை என்று ஒப்பாரிவைத்து அழுதனர்.
இதை கண்ணுற்ற முதியவர் அவர்களின் பிக்னிக் கதையை கேட்டதில் ஏழும் எருமைகள் என்பதை உணர்ந்து... அவர் சொன்னார் நான் ஒருவரை மீட்டி தருகிறேன்.... நான் சொல்வது போல் செய்யணும் என்று சொல்லி... ஒவொருவருக்கும் கம்பால் அடியை போடுவேன் ஒன்று, இரண்டு என்று சொல்லி ஓடனும் அப்படி ஓடினால் உங்களில் காணாமல் போனவர் வந்து விடுவார் என்றதும் அடிவாங்கினாலும் பரவா இல்லை நம் நண்பர் கிடைக்கணும் என்று என்னி சம்மதித்தனர். அந்த முதியவர் அடியை போட..... அந்த எருமைகள் ஒன்று, இரண்டு, என்று எழுவரை சப்த்தம் இட்டு எண்ணி ஓடினர். இது அவர்களின் கதை.....
நம் கதை எப்படி இருக்கணும்..... மழைக்காலம் என்பது தெரிந்ததே..... மீண்டு மழை பெய்வதும் தெரிந்ததே.... இப்படி இருக்க டீசல் இருக்கும் விலையில் இது புத்திசாலித்தனமா? நிரந்தர தீர்வை காணவும். நிரந்தர தீர்வுக்கு ஒரு யோசனை..... பாதாள சாக்கடை திட்டத்தை மாற்றி..... குழாய்கள் மூலம் ஊரின் தாழ்வான பகுதியை கண்டறிந்து மழை தண்ணீரை சேகரிக்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross