உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி இரண்டாம் கட்ட வினியோக நிகழ்ச்சி தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் 10.12.2011 அன்று (நேற்று) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேஸ்வரி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உலமாக்கள் - பணியாளர் நல வாரியத்தின் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். அத்துறையைச் சார்ந்த இளநிலை அலுவலர்கள் அவருடன் இருந்தனர்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் 31 பேரும் இந்நிகழ்ச்சியில் இலவச மிதிவண்டி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமாவின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ, செயலாளர் முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹீ ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அதன் பொருளாளர் மவ்லவீ ஷேக் உஸ்மான் மிஸ்பாஹீ, துணைச் செயலாளர் மவ்லவீ எம்.நாகூர் மீரான் மஸ்லஹீ, தூத்துக்குடி மாநகர செயலாளர் மவ்லவீ முஹம்மத் ஹதீஸ், மாநகர இணைச் செயலாளர் மவ்லவீ அப்துல் ஹலீம் மஸ்லஹீ ஆகியோர் துணைப்பணியாற்றினர்.
|