தமிழகத்தின் - கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதுதான் விருதாச்சலம் நகரம். 60,000 மக்களுக்கும் மேற்பட்டோர் வாழும் இவ்வூர் ஒரு முதல் நிலை நகராட்சியாகும்.
2001 ஆம் ஆண்டு இந்நகராட்சியின் தலைவராக - மக்களால் நேரடியாக தேர்வுசெய்யப்பட்டார் - டாக்டர் மு.வள்ளுவன்.
ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தினை தரவேண்டும் என்ற நோக்கில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற இந்த கண் மருத்துவர், தனது ஐந்தாண்டு அனுபவங்களை - வழி காட்டும் வள்ளுவன் என்ற புத்தகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தை புவனகிரி செயபாலன் என்பவர் எழுதியுள்ளார்.
தற்போது அச்சில் இப்புத்தகம் இல்லை என்றாலும் - இப்புத்தகத்தின் நகலை - PDF வடிவில் - டாக்டர் வள்ளுவனின் இணையதளம் (www.AchieveByHonesty.org) மூலம் பதிவிறக்கம் செய்யலாம். 150 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்துடன் உரையாடிய டாக்டர் வள்ளுவன் - தனது அனுபவம் பிறருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தான் இந்த புத்தகத்தை வெளியிட முடிவுசெய்ததாகவும், அதே காரணத்திற்காக தான் - தனது அனுபவத்தை ஆவணப்படமாகவும் (Documentary) வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் (Anti Corruption Movement) கடலூர் மாவட்ட தலைவராக தற்போதும் பொது காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டாக்டர், தான் தலைவராக இருந்த விருதாச்சலம் நகர்மன்றத்தின் நடவடிக்கைகளை - தனது பதவி காலத்திற்கு பிறகும் - கண்காணித்து வருகிறார்.
விருதாச்சலம் நகர்மன்றதிற்கு பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகள் குறித்து தணிக்கை குழுவின் (Audit Committee) கேள்வியின் அடிப்படையில் ஏன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என டாக்டர் வள்ளுவன் அரசின் மீது தொடுத்துள்ள PIL வழக்கில் அக்டோபர் மாதம் - ஆணை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் - ஏன் இந்த வழக்கினை சி.பீ.ஐ. யிடம் வழங்கக்கூடாது என பதில் கூற அரசிடம் வினவியுள்ளது.
டாக்டர் வள்ளுவனின் ஐந்தாண்டு பதவி காலம் குறித்து - சாதி நேர்மையால் ... என்ற ஆவணப்படம் (Documentary) வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1.5 மணி நேரம் நீளம் ஓடும் இப்படம் - விரைவில் காயல்பட்டினத்தில் திரையிடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் - kayal.tv இணையதளத்திலும் - இப்படம் - விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
1. பைய்யன் வள்ளுவன்.........!!! posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[13 December 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14471
அன்பு சகோதரர்களே......... மனித வடிவில் இருக்கும் மாக்களை மனிதனாக்க நம் அய்யன் வள்ளுவன் தன் போதனையை உரைத்தார்......... நம் பைய்யன் வள்ளுவனோ..... உருவம் உள்ள பிசாசுகளை (சமூக விரோதிகள், லஞ்சப்பிசாசுகள்) கண்டறிய தன் அனுபவத்தையும், போதனையையும் தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன். பைய்யன் வள்ளுவனுக்கு நன்றிகள் பல....... துடரட்டும் உங்களின் சமூக பணி... வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross