எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.மஹ்மூத் இன்று காலை 08.00 மணியளவில் காலமானார்.
அவரது ஜனாஸா, இன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார்.
இந்த நல்லடக்கத்தில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பல்லாக் லெப்பை,
குருவித்துறைப்பள்ளி முத்தவல்லி ஹாஜி எஸ்.எம்.கபீர், துணைச் செயலாளர் ஹாஃபிழ் கார்ப்பரேஷன் இஸ்மாஈல், இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, அஹ்மத் நெய்னார் பள்ளி இமாம் ஹாஜி அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ,
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ நூருல் ஹக் நுஸ்கீ,
காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், இக்ராஃ கல்விச் சங்க செய்தித் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
முன்னாள் காயல்பட்டினம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.செய்யித் அஹ்மத், காயலப்ட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், அதன் நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகி வாவு கே.எஸ்.புகாரீ, தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா மற்றும் எல்.கே. பள்ளிகளின் ஆசிரியர்கள், காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி,
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்ற தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசகர் ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், சிங்கப்பூர் காயல் நல மன்ற நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தாய்லாந்து காயல் நல மன்ற துணைத்தலைவர் கரூர் ட்ரேடர்ஸ் செய்யித் முஹம்மத், இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். |