காயல்பட்டினத்தில் நேற்று மதியம் முதல் சாரலாகத் துவங்கி, இடையிடையே இடைவெளிவிட்டு, அவ்வப்போது பெய்த மழை, மாலை 06.30 மணி முதல் இதமழையாகப் பெய்தது.
இரவு 09.00 மணியளவில் அது கனமழையாக உருவெடுத்து, நள்ளிரவு முழுக்க கனமழையாகப் பெய்து, அதிகாலை 06.30 மணியளவில் நின்றது.
இம்மழை காரணமாக, நகரில் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் வெள்ளமெனத் தேங்கியுள்ளது. |