எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.மஹ்மூத் 13.12.2011 அன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவரது உடல் அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நகரின் மூத்த குடிமகனாரும், சிறந்த பொதுநல சேவகருமான ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் மறைவுக்கு தக்வா காயல் நல மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப் பிழைபொறுப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.
அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.
இவ்வாறு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தனதறிக்கையில் தெரிவித்துள்ளது. |