காயல்பட்டினத்தில், நேற்று (14.12.2011) வரை பெய்த மழை காரணமாக, நகரின் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் உயர்ந்துள்ளது.
நகரின் தாழ்வான பகுதிகளிலுள்ள கிணறுகளில் கைக்கெட்டும் அளவில் நீர் உள்ளது. கிணற்றிச் சுற்றுச்சுவரைத் தவிர்த்துப் பார்த்தால், கிணற்று நீரும், தரையில் தேங்கியிருக்கும் நீரும் ஒரே மட்டத்திலிருப்பதைக் காண முடியும்.
குருவித்துறைப்பள்ளியின் இரு கிணறுகள்...
குருவித்துறைப்பள்ளியின் கிணற்றளவு தரை நீர் மட்டம்...
கொச்சியார் தெருவிலுள்ள ஒரு வீட்டின் கிணறு...
அதுபோல, நகரின் கிழக்குப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக, அங்கு இறந்தவர்களை அடக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடக்கத்திற்காக தோண்டப்படும் மண்ணறைகளில் நீரூற்றுகள் காணப்படுவதே இச்சிக்கலுக்குக் காரணம். இன்னும் மழை தொடர்ந்தால், மண்ணறை தோண்டவே இயலாத நிலை ஏற்படும்.
கடந்த சில தினங்களுக்கு முன், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியில் தோண்டப்பட்ட மண்ணறையின் காட்சி:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே பள்ளியில் மழைக்காலத்தின்போது மரணித்துவிட்ட ஒருவரை அடக்கம் செய்வதற்கு மண்ணறை தோண்ட இயலாத அளவுக்கு தண்ணீர் தேங்கியதன் காரணமாக, அருகிலுள்ள மரைக்கார்பள்ளி, தாயிம்பள்ளி, கடைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இடம் தேடப்பட்டு, அங்கும் அதே நிலை நிலவியதால், குருவித்துறைப்பள்ளியிலேயே தரை மட்டத்திற்கு மேல் மணலைக் கூட்டி, அதில் பள்ளம் தோண்டி இறந்தவரை அடக்கம் செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இன்று நகரில் சூரிய ஒளி தென்படுகிறதெனினும், குளிர்ந்த வானிலையே தொடர்ந்து நிலவி வருகிறது. |