காயல்பட்டினத்தில் இம்மாதம் 24ஆம் தேதியன்று கண் சிகிச்சை இலவச முகாம் மற்றும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக காயல்பட்டினம் கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் 13.12.2011 சனிக்கிழமையன்று இரவு 09.30 மணிக்கு, காயல்பட்டினம் குறுக்கத் தெருவிலுள்ள கே.வி.ஏ.டி. பசுமை இல்லத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிமகன் காதர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதன் மேலாளர் ஆஷிக் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் வேல் முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
மறைந்த மர்ஹூம் கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி நினைவு தினத்தை முன்னிட்டு, இம்மாதம் 22ஆம் தேதியன்று நகரின் பல இடங்களிலும் 30 மரக்கன்றுகளை நடுவதென்றும், 24.12.2011 அன்று காலையில், வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து, கண் சிகிச்சை இலவச முகாம் நடத்துவதென்றும், அன்று மாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதென்றும், நிகழிடம் குறித்து இறுதி முடிவு செய்யப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு அறிவிப்பதென்றும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர் அப்துல் ரசாக் நன்றி கூற, எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எம்.ஜஹாங்கீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கினர். |