தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி இலவச வினியோகத் திட்டத்தின்கீழ், காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில், மேல்நிலைப் பிரிவைச் சார்ந்த 128 மாணவியருக்கு மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அவற்றை வழங்கினார்.
15.12.2011 அன்று (நேற்று) காலை 12.00 மணியளவில், இதற்கென நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு மிதிவண்டிகளை இலவசமாக வழங்கி, மாணவியரை வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் உடனிருந்தனர். |