Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:58:00 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7723
#KOTW7723
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 16, 2011
நகர திமுக மீது இளைஞரணி செயலாளர் அதிருப்தி! தீக்குளிக்க போவதாக அறிவித்ததால் காவல்துறையினர் கைது செய்தனர்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4604 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

[இச்சம்பவம் குறித்த அசைபடக் காட்சியை இங்கே சொடுக்கி காணலாம்]

காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த டாக்டர் கே.ஆர்.செல்வநாதன் என்பவரின் மகன் ஆர்.எஸ்.கோபால். இவர், நகர திமுக இளைஞரணி செயலாளராகவும், ரஜினிகாந்த் நற்பணி மன்ற நகரச் செயலாளராகவும், ‘தென்றல்‘ அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நல அமைப்பின் மாவட்டத் தலைவராகவும், இன்னும் பல அமைப்புகளிலும் பொறுப்புகள் வகித்து வருகிறார்.

கடந்த 13.12.2011 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்திற்கு அறிவிப்புச் செய்து வெளியிடப்பட்ட பிரசுரத்தில் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றும், நகர திமுக தன்னை அவமானப்படுத்திவிட்டது என்றும், தனக்கே இந்த அவமதிப்பு என்றால், அடிமட்ட தொண்டனின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணி, தான் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், தனது உயிர்த்தியாகம் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்றும் அவர், அக்கூட்டம் நடைபெறுவதற்கு முன், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், 13.12.2011 அன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன் இரவு 07.00 மணியளவில், ஆறுமுகநேரி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். குற்ற விசாரணை முறை சட்டத்தின் (The Code of Criminal Procedure, 1973) 151 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்ட அவர் பின்ன்ர் விடுவிக்கப்பட்டார்.

[இச்சம்பவம் குறித்த அசைபடக் காட்சியை இங்கே சொடுக்கி காணலாம்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Nafeela (Kayalpatnam) [16 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14639

அடப் பாவமே!

எலக்சன்ல 13 ஆவது வார்டுக்கு கவுன்சிலரா போட்டி போட்டருள்ள! தீ குளிக்க போவதை ஏதோ அல்வா சாப்பிடுற மாதிரி இல்ல சொல்றாரு இறைவன்தான் இவரை போல உள்ளவங்களலாம் காப்பாத்தனும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Firdous (Colombo) [16 December 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14640

இப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்கும்வரை கழக கட்சிகளை (என்னதான் ஊழல் புரிந்தாலும்) யாராலும்

அசைச்சிக்க முடியாது!

அசைச்சிக்க முடியாது!

அசைச்சிக்க முடியாது!

தமிழன் தலைநிமிர்ந்து நிப்பது எப்போது??? தலைவனுக்கா, கட்சிக்காக, நடிகனுக்காக, இன்னும் பிற ..க்காக தீகுளிப்பதை நிறுத்துகிறானோ அப்போதுதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நல்ல தீர்வு கிடைக்கும்???
posted by Mauroof (Dubai) [16 December 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14641

அதிருப்தியை/கவலையை/விருப்பத்தை எல்லாம் வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு தீக்குளிப்பது, நாக்கை வெட்டுவது, விரலை வெட்டுவது, கண்ணை பிடுங்குவது, மூக்கை அறுப்பது போன்ற மூர்க்கத்தனமான செயல்கள் எல்லாம் இது போன்ற கட்சிசார் சகோதர/சகோதரிகளுக்கு சகஜம்.

ஆளும் கட்சியை சார்ந்தவராக இருந்தால் அரசு வேலை, ஆண்ட கட்சியாக இருந்தால் நிதி உதவி. இந்த இளைஞரணி செயலாளர் இவர் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து நல்ல ஒரு இளைஞராக வாழ முயற்சிக்கட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by PS ABDUL KADER (jeddah) [16 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14647

தி மு க இளைஞர் அணி செயலாளர்க்கு வகித்துவரும் கட்சியில் அதிருப்தி என்றல், பதவியை ராஜனாமா செய்து விடுவதை விட்டுவிட்டு தீக்குளிக்க போவதாக அறிவித்ததால் யாருக்கு என்ன பலன்................................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புத்திசாலிக்கு மூன்று வழிகள்.... மூடனுக்கு ஒரே.... வழி.!!!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [16 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14648

அன்பு என் உடன் பிறப்பே....... கழகத்தின் கொள்கையையே... தெரியாத்தவர்கள் கழகத்தை வழிநடத்துவது வேதனைக்குரியது.... தந்தை பெரியாரின், அறிஞர் அண்ணாவின் கொள்கையான மூட நம்பிக்கை, மனிதனை மனிதன் தீண்ட தகாமை, மூளையை மற்றவர்களுக்கு அடகு வைப்பது போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியது. தன்னம்பிக்கையை உருவாக்க உழைத்த கட்சியில் இருந்துகொண்டு திமுக இளைஞரணி செயலாளர் இப்படி நடந்து இருப்பது வருந்ததக்கது.

ஒத்தடி பாதையில் புத்திசாலிக்கு மூன்று வழிகள்.... மூடனுக்கு ஒரே.... வழி.!!! எதிரெதிரே வருபவர் இரண்டுமே..... மூடரானால் அடி,பிடி... கெடுபிடி.... தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Deen (Hkg) [16 December 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 14650

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு - தீ குளிக்கப் போறவன் சொளிவிட்டா செய்வான் - எல்லாம் ஒரு சீன தான் - கோடிக்கணக்கில் சுருட்டி விட்டு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டி திரியும் கட்சி தலைமையே இருக்கும் போது நீ ஏன்யா சாகனும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Vilack SMA (Yi Li , Hetang) [16 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 14652

Tea குடிக்க போறதா சொல்லியிருப்பாரு . தப்பா புரிஞ்சிருப்பாங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Mohmed Younus (Trivandram) [16 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14654

ஹிந்தி எதிர்ப்பின் போடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடகம் இன்னும் முடிய வில்லையா?

நீங்கள் சுய மரியாதையை இயக்கத்தின் வழி வந்தவர்கள்.(?)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by s.e.m. abdul cader (bahrainne ) [16 December 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 14656

நீ தீ குளிச்சால் யாருக்கு நஷ்டம் ? சற்று சிந்தித்து பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [16 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14664

சகோதரர் சொளுக்கு அவர்கள் நகர செயலாளர் பொறுப்பில் இருந்த காலத்தோடு இந்த கட்சி செல்வாக்கு இழந்து விட்டதில் சந்தேகம் இல்லை... தற்போது அனிதா அவர்கள் மூலம் கட்சி வெற்றி பெற்றது ஆனால் ஊரில் கட்சிக்கு செல்வாக்கு இல்லை... கட்சிக்கு விழுந்த ஓட்டுகள் இல்லை அனிதா அவர்களுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள்...

ஊரில் செல்வாக்கு இல்லாத கட்சிக்காக சகோதரர் கோபால் தீ குளிக்க நினைத்தது வேதனைக்குரிய விசியம்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Salai. Mohamed Mohideen (USA) [16 December 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 14672

அய்யோ! இந்த அரசியல்லே என்ன வெல்லாம் சீன் போட வேண்டியது இருக்கு. சினிமா நடிகர்களை விட நடிப்பில் நம்ம அரசியல்வாதிகள் மிஞ்சு விடுகிறார்கள்.

தலைவிக்கு காணிக்கைன்னு நாக்கை வெட்டிகிறதும்..ஆவூன்னா ஏதோ steam பாத் (Sauna )எடுக்க போற மாதிரி...தீக்குளிக்க கிளம்பி விடுகிறார்கள். பல லட்சம் கோடி 2G sepctrum எல்லாம் இவர்களுக்கு பெரிய குறையாக...அவமானமாக தெரிய வில்லை.

அதையெல்லாம் கண்டிச்சு தன்மான (?) திமுக-வில் எவரும் தீக்குளிக்க வில்லை. காலம்/தலைவர்கள் மாறினாலும் இன்னும் இந்த தீக்குளிக்கிற காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. கேவலம் இந்த அரசியல் பொழைப்புக்காக என்றைக்குதான்...இந்த காட்சிகள் மாறப்போகின்றதோ. சகோதருக்கு, இறைவன் நம்மை படைத்ததன் நோக்கம் பற்றி ஊரில் இருக்கும் யாரவது 'Daawa ' கொடுங்களேன்.

PS :தீக்குளிக்க போன நண்பர்க்கு ADMK -வில் இருந்து அழைப்பு எதுவும் வந்துள்ளதோ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நல்ல போடுறாங்கப்பா சீனு.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [16 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14674

யார் இந்த கோபால்.. இதுவரை யார் என்றே தெரியாது. இன்றோ இந்த ஒரு சிறிய காமடி சீனால் உலக புகழ் பெற்றுவிட்டரே... நெட் என்ன, கமெண்ட்ஸ் என்ன, யூ டியூப் என்ன, கேபிள் டிவி என்ன...

யப்பா கோவாலு.. ஒரு சிறு துண்டு கடிதம் எழுதிவைத்து விட்டு தீக்குளித்து இருக்கலாம் அல்லவா..அனைத்து தொண்டர்களும் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்களே, பூமிக்கும் 75 கிலோ பாரம் குறைந்து இருக்கும் அல்லவா..

நல்ல போடுறாங்கப்பா சீனு.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி!...
posted by OMER ANAS (DOHA QATAR.) [16 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14675

Tea குடிக்க போறதா சொல்லியிருப்பாரு . தப்பா புரிஞ்சிருப்பாங்க! தம்பி தப்பா நாம்தான் புரிந்துள்ளோம்!

உண்மையில் உயிரை(சும்மா ஒரு பேச்சுக்கு,நாட்டுக்காக) கொடுக்க நினைப்பவனிடம், போலிஸ்,பொறுக்கி,இராணுவம் எதுவுமே(அவர்களும் மனிதர்கள் தானே!)நெருங்காது! இங்கே அசைபட காட்ச்சியை பார்த்தால், தீ குளிக்க வந்த மாதிரி தெரியலே! புருடா விட்ட மாதிரியே தெரிகிறது. தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by sulaiman (manama) [16 December 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 14676

I WASTED MY PRECIOUS TIME OF 1.30 MINUTES BY WATCHING THE YOUTUBE LINK, HAHA BUT ITS FUNNY ON VIDEO @0.23 நம்ம அன்னான் கோபாலு சொல்றார் " சரி வர்ரேன் "

ஹஹா சங்கு ஊதப்போறவர் " சரி வர்ரேன் " ன்னு சொல்றார்பா என்ன பண்றது ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by N.T.SULAIMAN (YANBU) [16 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14688

சஹோதரர் கோபால் இன்னும் நகராட்சிமன்ற தேர்தலில் 13 வது வார்டில் தோல்வி அடைந்த அதிர்சில் இருந்து மீளவில்லை மனம்தளரவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Cnash (Makkah ) [16 December 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14692

திமுக.... தீக்குளிக்க முயல்வோர் கழகம்....என்று அந்த கட்சிக்கு பெயரை மாற்ற சொல்லுங்கள்!! வந்துன்ட்டாங்க கிளம்பி நாட்டுலே பெட்ரோல் மண்ணெண்ணெய் விக்குற விலைலே!!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. கோவாலு அய்யா கோவாலு
posted by முஹம்மது அப்துல் காதர் (chennai) [17 December 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 14719

என் இனிய உடன்பிறப்பே, நீ உன்னையே எரித்துக்கொண்டாலும் உலகிற்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகத்தான் இருப்பாய் .. நீ கடலிலே விழுந்து தற்கொலை செய்தாலும் மக்களுக்கு பயன்படும் கட்டுமரமாகத்தான் மிதப்பாய்.. நீ டீ குடிக்கப்போயிருந்தால் உன்னை நாங்கள் சிறந்த குடிமகன் என்று பட்டம் சூட்டி இருப்போம்

ஆனால் நீயோ தீ குளிக்கப்போனதால் இன்று முதல் நீ தீக்குளி கோவாலு, தீக்குளி கோவாலு , தீக்குளி கோவாலு என்று மக்கள் அனைவராலும் செல்லமாஹ அழைக்கப்படுவாய்.

சகோதரர் சொளுக்கு அவர்கள் காயல் பட்டணத்தின் தி.மு.க கிளையின் நகரச் செயலாளராக இருந்த போது அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்களே அவருக்கு துரோகம் செய்து அவரை கட்சியை விட்டே வெளியேற செய்ய வேண்டும் என்று சதி திட்டம் தீட்டி அதுபடியே அவரை வெளியேற்றவும் செய்தார்கள் அந்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் இப்போது அதே கூட்டத்தால் நீங்கள் வெளியேற்றப்பட்டுள்ளீர்கள் வினை விதைத்தவன் அதனை அறுவடை செய்தே ஆகவேண்டும்.

சகோதரர் சொளுக்கு அவர்களுக்கு பிறகு காயல்பட்டணத்தில் தி.மு.க வே இல்லை நீங்க என்னடான்னா தி.மு.க கூட்டத்திலே உங்க பேரு இல்லேனு வருத்தப்படுரீங்களே, இதெல்லாம் அரசியல்லே சகஞம் பேசாம நீங்க வருத்தமில்லா வாலிபர் சங்கத்திலே போயி உறுப்பினரா சேர்ந்திடுங்க அதான் உங்களுக்கு நல்லது. முஹம்மது அப்துல் காதர் , சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. தரிகிட....
posted by S.A.HABEEB MD. NIZAR (Jeddah) [17 December 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14722

நண்பர் கோபால் : எல்லாம் ஒரு கணக்கு தானே... சும்மா ஒரு பீலா விட்டேனுகோ....எல்லாரும் நம்பிடில...அபிஸ்து!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14744

"கிணற்றில் குதிக்கப்போகிறேன் தொப்பியை பிடிச்சுக்கோ "என்றானாம் வாப்பா சாகிபு. அந்த கதையாகவே உள்ளது கோபாலின் அறிக்கை. இதெல்லாம் கழக அரசியலின் மிக புளித்துப்போன ஸ்டன்ட்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர திமுக மீது இளைஞரணி செ...
posted by Cnash (Makkah ) [17 December 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14747

ஒரு வீடோ ஏன் ஊரே தீ பிடிச்சி எரிஞ்சா கூட .. போலிசோ,FIRE ENGINE எத்தனை போன் போட்டாலும் அணைக்க ஆள் அனுப்ப மாட்டாங்க!! எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து இருப்பார்!! ஆனா இந்த கோபாலின் பொன்னுடலை பாதுகாக்க இவ்வளவு விரைவா வந்து... ஒரு மாபெரும் தியாகி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உடன்பிறப்பு, வருங்கால வல்லரசு இந்தியாவின் சிற்பி கோபாலின் விலைமதிப்பற்ற(!!) உயிரை காப்பாத்திய காவல்துறைக்கு நன்றி!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved